ஃபிட்னஸ் சிங்



ஜிம்முக்குப் போய், கடுமையாக உடற்பயிற்சி செய்து, டயட்டை பின்பற்றி, புரோட்டீன் ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொண்டால்தான் பாடி பில்டராக முடியும் என்பது பொதுவான கருத்து.
அம்மா சமைப்பதை வயிறு நிறைய சாப்பிட்டு, அடிப்படை உடற்பயிற்சிகளை நாள்தோறும் செய்தாலே போதும். நல்ல பாடி பில்டராக ஆகிவிடலாம் என்று நிரூபித்திருக்கிறார் குவார் அம்ரித்பிர் சிங். இருபது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் குவார் பஞ்சாப்பில் பிறந்தவர். நெய், வெண்ணை ஆகிய பால் பொருட்களும், அம்மாவின் சமையலும்தான் இவரது டயட் ரகசியம்.
 
வீட்டில் கால்நடைகளைப் பராமரிக்கும் இடத்தில் இருக்கும் காலியான பகுதியில் தினமும் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார். சமீபத்தில் ஒரு நிமிடத்தில் கை தட்டிக்கொண்டே அதிக புஷ் அப்களை எடுத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார்.

தன்னுடைய உடற்பயிற்சி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுகிறார். இவரது வீடியோக்களைப் பார்த்தவர்கள் ஜிம்முக்குப் போவதை நிறுத்திவிட்டு, வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யத் தொடங்கியிருக்கின்றனர். அத்துடன் ‘ஃபிட்னஸ் சிங்’ என்றும் இவரை செல்லமாக அழைக்கின்றனர்.

த.சக்திவேல்