யூடியூப் கிராமம்



ஆண்டிப்பட்டி முதல் அமெரிக்கா வரையிலான எல்லா பட்டி தொட்டிகளிலும் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்துவிட்டது யூடியூப் சேனல். இதன் அடுத்த கட்டமாக ஒரு கிராமத்தின் முக்கிய தொழிலாக மாறியிருக்கிறது யூடியூப் சேனல். அந்த கிராமத்தின் பெயர் துள்சி. சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது துள்சி. இங்கே சுமார் 3000 பேர் வசித்து வருகின்றனர். இதில் 1,500 பேர் ஏதோவொரு வகையில் யூடியூப் சேனல்களுடன் தொடர்பில் உள்ளனர். இதற்கு மூல காரணம் துள்சியைச் சேர்ந்த சுக்லா, ஜெய் வர்மா என்ற இரு நபர்கள்.

சில வருடங்களுக்கு முன்பு வங்கியில் வேலை செய்துவந்த சுக்லாவும், ஆசிரியர் பணியில் இருந்த ஜெய்யும் தங்களது வேலையை துறந்துவிட்டு, யூடியூப் சேனல்களை ஆரம்பித்தனர்.
இதில் வருமானம் கிடைப்பதை அறிந்த  உள்ளூர்வாசிகள் சிலரும் யூடியூப் சேனல்கள் தொடங்க, இன்று துள்சியில் 40 யூடியூபர்கள் வலம் வருகின்றனர். அந்த சேனல்கள் எல்லாம் துள்சிவாசிகளை வைத்தே வீடியோக்களை உருவாக்குகின்றன. அதனால் துள்சியை ‘யூடியூப் கிராமம்’ என்று அழைக்கின்றனர்.

த.சக்திவேல்