ரூ.12 லட்சம் கோடி! 8 ஆண்டுகளில் வங்கிகள் தள்ளுபடி செய்த வாராக் கடன் தொகை இது
இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ தகவல்கள்படி 2004 - 05 நிதிஆண்டு முதல் 2021 - 22 நிதியாண்டு வரை தள்ளுபடி செய்யப்பட்ட கடன் விவரங்கள் வருமாறு:
இதன்படி மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 2004 முதல் 2014 வரையான பத்து ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த வராக் கடன் தொகை ரூ.63,503 கோடி. மோடி பிரதமரானதும் முதல் நிதியாண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை ரூ. 60,197 கோடி. அதாவது 10 ஆண்டுகளில் மன்மோகன் சிங் அரசு செய்த தள்ளுபடியை கிட்டத்தட்ட ஓராண்டிலேயே செய்தது மோடி அரசு. அதன்பின்னர் வருடம் தோறும் அது அதிகரித்து வந்ததே தவிர குறையவில்லை.
உச்சபட்சமாக 2019 - 20 நிதியாண்டில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 924 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. சென்ற நிதியாண்டில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 968 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.2014ல் மோடி பிரதமரான பின்னரான கடந்த 8 நிதியாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த கடன் தொகை 12 லட்சத்து 61 ஆயிரத்து 5 கோடி ரூபாய். இது, மன்மோகன் சிங்கின் பத்து ஆண்டுகள் தள்ளுபடியை விட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம்.
இதில் ஹைலைட், வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது ரிசர்வ் வங்கி தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளதுதான்.கடந்த 2021 - 22 நிதியாண்டில் மட்டும் 2,700 பேர் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை. அதிகபட்சமாக 2,840 போ் 2020 - 21 நிதியாண்டில் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை.இந்த வங்கிக் கடன் தள்ளுபடிகளில் 75 சதவீதத்துக்கு மேல் பொதுத்துறை வங்கிகளில்தான் நடந்துள்ளது.
காம்ஸ் பாப்பா
|