பகோடா @ பகோரா!



பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஒரு இடம் அல்லது பிரபலமான நபர் அல்லது தங்கள் மூதாதையரின் பெயரைச் சூட்டுவதுதானே வழக்கம்?
இதற்கு மாறாக சாப்பிடும் உணவின் பெயரை தங்கள் குழந்தைக்கு சூட்டிய பெற்றோர் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

யுகேவைச் சேர்ந்த ஒரு தம்பதி, அப்படி தாங்கள் சப்புக் கொட்டி சாப்பிடும் உணவின் பெயரை தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளார்கள்!  அயர்லாந்தில் உள்ள கேப்டன் டேபிள் உணவகத்துக்கு அடிக்கடி வந்த தம்பதிகள், அங்குள்ள இந்திய உணவு ஒன்றை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

ஒரு கட்டத்தில் சுவாசம் போல் அந்த உணவு அவர்களுக்குள் இரண்டறக் கலந்துவிட்டது!
எனவே தங்கள் குழந்தைக்கு அந்த இந்திய உணவின் பெயரையே சூட்டிவிட்டனர்!அந்த உணவின் பெயர்... மன்னிக்கவும்... அவர்கள் குழந்தையின் பெயர் ‘பகோரா’!
அதாவது பகோடாவைத்தான் ‘பகோரா’ என உச்சரித்திருக்கிறார்கள்!

இந்த விஷயத்தை அவர்கள் எதேச்சையாக இணையத்தில் அறிவிக்க அது பதார்த்தமாக வைரல் ஆகிவிட்டது!மறுநாளே அந்த உணவகத்தின் உரிமை யாளர், இச்செய்தியே விளம்பரத்துக்காக பதிவிட்டதுதான் என்று சொல்லி வைரல் மோடில் கரி பூசிவிட்டார்! நீதி! இணைய செய்தியை நம்பாதே!

காம்ஸ் பாப்பா