அமெரிக்க அருங்காட்சியகத்தில் இந்திய பெண் விமானி!
ஏர் இந்தியா நிறுவனத்தின் பெண் விமானி ஜோயா அகர்வால், சான் ஃபிரான்சிஸ்கோ ஏவியேஷன் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளார். சென்ற ஆண்டு இவரது தலைமையிலான அனைத்து பெண் விமானிகள் குழு, சான் ஃபிரான்சிஸ்கோவிலிலிருந்து பெங்களூரு வரை விமானத்தை இயக்கியது. இதன் தூரம் 16,000 கிமீ. இதுவே உலகின் மிக நீண்ட வான்வழி பயணம்.
இந்த சாதனையைப் புரிந்த முதல் இந்திய பெண் விமானி ஜோயா அகர்வாலை அங்கீகரிக்கும் வண்ணம் சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள SFO ஏவியேஷன் அருங்காட்சியகத்தில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.இந்த அருங்காட்சியகத்தில் விமானியாக இடம்பெற்ற முதல்நபரும் இவர்தான்; இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற ஒரே நித்திய ஜீவியும் இவர்தான்!
காம்ஸ் பாப்பா
|