மக்களைப் பாதுகாக்கும் ஸ்டைலிஷ் நாகப் பாம்பு! இது கோப்ரா சீக்ரெட்!



பேய் படங்கள் என்றாலே பெரிய பங்களா, நிறைய கேரக்டர்கள், மிகப் பெரிய பட்ஜெட்... இந்த டெம்ப்ளேட்டை உடைத்து ஒரு சிறு பேச்சிலர் அறைக்குள் கூட பேயைக் காட்டி பயமுறுத்த முடியும் என்று நிரூபித்தவர் ‘டிமான்டி காலனி’ இயக்குநர் அஜய் ஞானமுத்து. தொடர்ந்து பரபர திரில்லர் ‘இமைக்கா நொடிகள்,’ இதோ இப்பொழுது ‘கோப்ரா’ என இவருடைய கிராஃப் ‘கோப்ரா’வை விட வேகமாக சீறிக் கொண்டிருக்கிறது.

‘‘விரைவில் ரிலீஸ்... அதனால் டே & நைட்டா பேட்ச் ஒர்க் வேலைகள் போயிட்டு இருக்கு. இதோ டிரெய்லர் ரிலீஸ் ஆகிடுச்சு. நாலு வருஷ காத்திருப்பு, நிறைய சவால்கள், தடைகள் அத்தனையும் கடந்து இப்ப ரிலீஸ்...’’ பரபரப்புக்கிடையே  உற்சாகத்துடன் வரவேற்றார் அஜய் ஞானமுத்து. ‘கோப்ரா’... எதனால் இந்தப் பெயர்? படத்தின் கதைக்கும் கோப்ராவுக்கும் ஒரு லிங்க் இருக்கு.
கோப்ராவின் குணங்கள் ஹீரோவுக்கும் இருக்கும். இதுக்கு மேல சொன்னா கதையையே சொன்ன மாதிரி ஆகிடும்... படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. அப்படி என்னதான் கதை..? விக்ரமுக்கு எத்தனை கெட்டப்கள்..? முதல்ல படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் சாருக்குதான் நன்றி சொல்லணும். அவரால்தான் சியான் விக்ரம் சார் படத்துக்குள்ளே வந்தார். நான் என்ன நினைக்கிறேனோ அதை அப்படியே ஸ்கிரீன்ல கொண்டு வரணும்னு நினைப்பேன்.

ஓர் இயக்குநர் நினைக்கிறத அப்படியே ஸ்கிரீன்ல கொண்டுவர தன்னால முடிஞ்ச அளவு மெனக்கெடுவார் விக்ரம் சார். அவர் மாதிரி ஒரு ஹீரோ கிடைச்சதுக்கு அப்புறம் வேற என்ன வேணும்..? ட்ரீம் மாதிரி இருக்கு. ‘இமைக்கா நொடிகள்’ படத்துக்கு முன்னாடியே விக்ரம் சார் கிட்ட ‘கோப்ரா’ ஸ்கிரிப்ட் சொன்னேன். அவருக்கு லைன் பிடிச்சிருந்துச்சு. உடனே ஆரம்பிச்சாச்சு.

இது ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் படம். படம் முழுக்க பரபர வேகத்தோடு பயணிக்கும். விக்ரம் சாருக்கு இந்த படத்துல ஏழு கெட்டப்னு செய்திகள் பார்க்கறேன். ஆனா, அதுதான் இல்லை, அதுக்கும்  மேல! நிறைய கெட்டப்ல வர்றார். எல்லாமே கதைக்குத் தேவையான கெட்டப்கள். அதை படம் பார்க்கும்போது நீங்களே புரிஞ்சிப்பீங்க. விக்ரம் சார் இதுல ஒரு கணிதவியலாளர். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். அதேபோல மத்த கெட்டப்புகள் எதுக்கு, என்ன காரணம்... இதெல்லாம்தான் கதையே.

கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் அளவுக்கு யோசிச்சிருக்கீங்களே... எப்படி அவரை நடிக்க சம்மதிக்க வச்சீங்க?
என் படத்துல எப்பவுமே கேரக்டர்கள்ல ஏதாவது வித்தியாசம் காட்டணும்னு நினைப்பேன் அப்படிதான் ‘இமைக்கா நொடிகள்’ படத்துல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யாப் சார் வில்லனா நடிச்சார். இந்தப் படத்துல ஒரு ஹைடெக் ஸ்டைலிஷ் ஃபாரின் இன்டர்போல் ஆபீஸர் கேரக்டர் இருக்கு. அதுக்கு ஃபிரஷ்ஷான ஒரு ஆக்டர் இருக்கணும்னு நினைச்சேன். அதுவும் தெரிஞ்ச முகமா இருக்கணும்... என்ன செய்யலாம்னு யோசிச்சப்பதான் இர்ஃபான் பதான் டிக் டாக் வீடியோக்களை எல்லாம் பார்த்தேன்...

ஏன் இவரை நடிக்க வைக்கக் கூடாதுன்னு தோணுச்சு. அவருக்கு கடைசி வரைக்கும் இருந்த ஒரே கேள்வி ‘எதுக்காக நீ என்னை செலக்ட் செய்த’ என்பதுதான். அந்தக் கேள்விக்கான பதில் படத்தைப் பார்க்கும் போது புரியும்னு சொன்னேன். கொஞ்ச நேரம் யோசிச்சவர், ஓகே சொல்லிட்டார். முதல் ரெண்டு நாட்கள் மட்டும் ஷூட்டிங் ஸ்பாட், ஆக்டிங், கேமரா... இதையெல்லாம் கொஞ்சம் தயக்கமா பார்த்தார். அப்புறம் சுலபமா செட் ஆகிட்டார்.  எதையும் மெனக்கெட்டு புரிய வைக்க வேண்டிய சூழல் ஏற்படவே இல்ல. ஒரு டேக் ரெண்டு டேக்கில் ரொம்ப சூப்பரா நடிச்சுக் கொடுத்திருக்கார்.

ஸ்ரீநிதி செட்டி, ரோஷன் மாத்யூ, கே. எஸ் ரவிக்குமார்... இன்னும் யாரெல்லாம் இருக்காங்க?ஸ்ரீநிதி செட்டி ரொம்ப அழகான ஹீரோயினா தன்னுடைய வேலையை சரியா செய்திருக்காங்க. கதைக்குள்ளேயும் அவங்களுக்கு முக்கியமான கேரக்டர் இருக்கு. மிருணாளினி ரவிக்கு ரொம்ப முக்கியமான ரோல். ரோஷன் மாத்யூ, கே.எஸ் ரவிக்குமார் சார், மியா ஜார்ஜ், ஆனந்த் ராஜ் சார்... இப்படி எல்லாருமே சர்ப்ரைஸான கேரக்டர்கள்ல வருவாங்க. மலையாளத்தில் ரோஷன் மாத்யூ நடிச்ச படங்கள் அத்தனையுமே ஹிட்... இந்த படத்தில் அவர் கேரக்டர் பேசப்படும்.
ஏ.ஆர்.ரஹ்மான்... இந்த மேஜிக் நடந்தது எப்படி?

எனக்கே அது மேஜிக் மொமெண்ட்தான். நான் ரஹ்மான் சார் ஃபேன். படத்துல இந்த கேரக்டர்ஸை இவங்க செய்யணும், டெக்னீஷியன்ஸ் இவங்க... இப்படி எல்லாமே பிளான் செய்தோம். ஆனா, கொஞ்சமும் பிளான்ல இல்லாதது ரஹ்மான் சார் உள்ளே வந்ததுதான்!அதெல்லாம் நடக்குமானு யோசிக்கிற அளவுக்கு கனவு மாதிரியான விஷயம். நான் ரெண்டு படம்தான் கொடுத்துருக்கேன். மூணாவது படத்திலே ரஹ்மான் சார் மியூஸிக்கா... பேராசை அதெல்லாம்.

ஆனால், தயாரிப்பாளர் லலித் சார் ரஹ்மானைக் கேட்கலாமானு கேட்டார். எனக்கு அந்த கேள்வியே சர்ப்ரைஸா இருந்துச்சு. திடீர்னு ரஹ்மான் சார் கூப்பிடுறதா சொல்லி ஒரு நாள் தயாரிப்பாளர் கூப்பிட்டு விட்டார். எப்படியும் மாட்டேன்னு சொல்லப் போறார்... சரி ஒரு செல்ஃயாவது கிளிக் பண்ணிட்டு வந்திடுவோம்னுதான் போனேன். பொறுமையா கதையைக் கேட்டவர் உடனே ஓகே சொல்லிட்டார். அப்புறம் என்ன... வானத்தில் பறக்கிற மாதிரி ஒரு ஃபீல்!.

படத்தின் ஸ்கிரிப்ட்டில் மட்டும் நிறைய பேர் வேலை செய்திருக்காங்களே..?  

‘அறிந்தும் அறியாமலும்’, ‘நான்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ தொடங்கி ‘மாறா’ வரை நிறைய ஸ்கிரிப்ட்டுகளில் வேலை செய்த நீலன் கே சேகர் இந்தப் படத்தில் திரைக்கதையில் வேலை செய்திருக்கிறார்.

இவர் மட்டுமில்லாம கண்ணா ஸ்ரீவஸ்தன், ‘டைரி’ இயக்குநர் இன்னாசி பாண்டியன், பாரத் கிருஷ்ணமாச்சாரி... அப்புறம் நான்... இதுதான் ‘கோப்ரா’ ஸ்கிரீன் பிளே டீம். இவங்க இல்லாம படம் கணிதஅடிப்படையிலே இருக்கறதால ‘லெட்’ஸ் மேக் இன்ஜினியரிங் ஈஸி’ யூடியூப் சேனல் டீம் ஸ்க்ரிப்ட்ல நிறைய துறை சார்ந்த விஷயங்களுக்கு உதவியிருக்காங்க.  

டெக்னீஷியன்ஸ்..?

படத்துக்கு சினிமாட்டோகிராபி ஹரிஷ் கண்ணன். பெரிய படம் என்கிறதால எனக்கு நெருக்கமான ஒருத்தர் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ‘இமைக்கா நொடிகள்’ல அசோசியேட்டாக வேலை செய்தவர் ஹரிஷ் . அவர் ஒர்க் நிச்சயம் ஹைலைட்டா தெரியும். ஜான் ஆபிரஹாம் எடிட்டிங். ஒரு எடிட்டர் படத்துக்கு எடிட்டரா மட்டுமில்லாம டைரக்டராகவும் வேலை செய்யணும். அதை ஜான் ஆபிரகாம் ரொம்ப சிறப்பா செய்திருக்கார். அவரும் புதுசுதான். இந்தப் படத்துக்கு அப்புறம் நிறைய உயரங்கள் போவார்.  

‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’தான் இந்தப் படத்தை டிஸ்ட்ரிபியூட் செய்றாங்க. ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ லலித்குமார் சார் தயாரிப்பு. படம் நாளுக்கு நாள் பிரம்மாண்டமா மாறினதுக்கு இவங்க அத்தனை பேருடைய உழைப்பும் காரணம். ‘டிமான்டி காலனி 2’ ஸ்கிரிப்ட் வேலைகள் முடிச்சிட்டீங்க போலயே..?  

‘டிமான்டி காலனி 2’ மட்டுமில்ல... 3,4, 5 வரைக்கும் ஸ்கிரிப்ட் முடிச்சிட்டோம். இந்தப் படத்தை சும்மா ஒரு செகண்ட் பார்ட் எடுத்தோம்னு இல்லாம தொடர்ச்சியா ஒரு மூவி சீரிஸ் மாதிரி கொடுக்கலாம்னு முடிவு செய்திருக்கோம்.

கதை, திரைக்கதை எல்லாமே எழுதி ரெடியா இருக்கு. முந்தைய பாகத்தை விட இந்த 2ம் பாகம் ரொம்பவே பிரம்மாண்டமா இருக்கும். நான் தயாரிப்பு, கதை செய்திருக்கேன். இயக்கம் ‘கோப்ரா’வில் என் கூட அசோசியேட்டாக வேலை செய்த வெங்கடேஷ் கோபால். அருள்நிதி சார்தான் ஹீரோ. ‘கோப்ரா’ல எனக்கும் சீயான் விக்ரம் சாருக்கும் ஒரு நல்ல வேவ் லெங்க்த் செட் ஆயிடுச்சு. அதனால அடுத்த படமும் அவர் கூடதான். அந்தப் படத்தை இன்னும் பிரம்மாண்டமா, பெரிய அளவில் பிளான் செய்திருக்கோம். அந்தப் பட வேலைகளும் சீக்கிரம் ஸ்டார்ட் ஆகும்.

விநாயகர் சதுர்த்தி, விடுமுறை... அதுக்கு ஏத்த மாதிரி விக்ரம் படம்... அதைத் தாண்டி கோப்ரா ஆடியன்ஸுக்கு என்ன கொடுக்கும்? பரபரப்பான ஸ்டைலிஷ் திரில்லர் சைக்கலாஜிக்கல் படமா ‘கோப்ரா’ படம் இருக்கும். எமோஷனலா இருக்கும். ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும்னு நம்புறேன்.

ஷாலினி நியூட்டன்