பேச, கேட்க முடியாத போஸ்ட் வுமன்!



கேரளா முழுவதும்  பிரியத்துடன் உச்சரிக்கும் ஒரு பெயர், மெரின்!

ஆலப்புழாவில் உள்ள ஓர் அஞ்சலகத்தில் தபால்காரராக வேலை செய்து வருகிறார் மெரின். இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? பொதுவாக தபால் கொடுக்கும் பணியைச் செய்பவர்களுக்கு மக்களுடன் வாய்மொழி தொடர்புகொள்வது அவசியம். ஆனால், மெரினுக்கு பிறந்ததிலிருந்து பேச வராது ; செவித்திறனும் இல்லை. சைகை மொழியின் துணைகொண்டு தபால் கொடுக்கும் வேலையில் அசத்தி வருகிறார்.

அஞ்சலகம் இருக்கும் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் தன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைப் போல மெரினைப் பார்க்கின்றனர். இத்தனைக்கும் மெரின் வேலையில் சேர்ந்து சில மாதங்களே ஆகின்றன. கொல்லத்தில் பிறந்த மெரின், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் டிப்ளமோ முடித்தவர்.

மூன்று வருடங்கள் லேப் அசிஸ்டெண்ட்டாக பணியாற்றிருக்கிறார். தபால்காரர் வேலைக்கு விண்ணப்பித்து, பல போட்டிகளுக்கு நடுவே இந்த வேலையைத் தன்வசமாக்கியிருக்கிறார்.  தன்னைப் போலவே பேச முடியாத, காது கேளாத ப்ரீஜித் என்பவரைத் திருமணம் செய்த மெரினுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

த.சக்திவேல்