91 வருடங்களாக ஒரே சாண்ட் விச்!



இங்கிலாந்தின் எலிசபெத் மகாராணியை அனைவருக்கும் தெரியும். இவருக்கு இப்பொழுது வயது 96.இவர், தன் 5 வயதிலிருந்து ஒரே சாண்ட்விச்சைத்தான் சாப்பிடுகிறார் என்பது வியக்க வைக்கும் தகவல் அல்லவா?இச்செய்தியை பகிர்ந்தது ராணியின் தனிப்பட்ட செஃப் டாரென் மெக்கிரடி. இவர் எலிசபெத் ராணிக்கு கடந்த 15 வருடங்களாக செஃப் ஆக இருக்கிறார்.
‘‘எலிசபெத் ராணிக்கு 5 வயது இருக்கும் போது, நர்சரியில் அவருக்கு பிரெட் பட்டர் ஜாம் சாண்ட்விச் வழங்கப்பட்டது! அப்போதிலிருந்து, மதியம் தேனீர் அருந்தும்போது, அவர் இந்த சாண்ட்விச்சைத்தான் சாப்பிட்டு வருகிறார்...’’ என்கிறார் மெக்கிரடி.

இந்த சாண்ட்விச்சில் பயன்படுத்தப்படும் ஜாம், பெரும்பாலும் ஸ்ட்ராபெரி பழங்களால் தயாரிக்கப்படுவது. இதற்காக ஸ்காட்லாந்தின் தோட்டங்களில் விளையும் சிறந்த வகை ஸ்ட்ராபெரி பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மற்ற வகை சாண்ட்விச்கள் பரிமாறப்பட்டாலும், எலிசபெத் ராணி விரும்புவது இதைத்தான். தவிர, அவர் உட்கொள்ளும் ஃபிஷ் அண்ட் சிப்ஸ் உணவும், பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்படுகிறது! வழக்கமாக எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் மீனை, ராணி, பேக் செய்துதான் உண்பாராம்.

காம்ஸ் பாப்பா