38 வருடங்களுக்குப் பின் இந்திய ராணுவ வீரரின் உடல் மீட்பு!



1984ல் ‘ஆபரேஷன் மேக்தூத்’க்காக உலகின் உயரமான போர்முனைக்கு சென்ற 20 இராணுவ வீரர்களில் ஒருவர் உத்தரகாண்டைச் சேர்ந்த ஹர்போலா.ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அக்குழு பனிச்சரிவில் சிக்கிக்கொண்டது. இதில் 15 பேரின் உடல் மீட்கப்பட்டிருந்தாலும், 5 பேரின் உடல் கிடைக்கவில்லை. இதில் ஹர்போலாவும் ஒருவர்.இந்த ஹர்போலாவின் உடல், இப்போது சியாச்சினில் ஒரு பழைய பதுங்குக் குழியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

ஹர்போலாவின் மனைவி சாந்தி தேவி இப்போது சரஸ்வதி விஹார் காலனியில் வசித்து வருகிறார். 1984ல் அவருக்கு திருமணமாகி 9 வருடங்களாகியிருந்தது. அப்போது 28 வயதாக இருந்த சாந்தி தேவியிடம், நான்கு வயதிலும், ஒன்றரை வயதிலும் இரு பெண் குழந்தைகள் இருந்தனர். இப்போது சாந்தி தேவிக்கு 66 வயதாகிறது.ஹர்போலாவின் உடலுடன் மற்றொரு வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், ஆனால், இன்னும் அது யார் என்று அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

காம்ஸ் பாப்பா