ஹாட்டஸ்ட்...கேட்ஜெட்ஸ்...
 ஸ்மார்ட் வாட்ச் ஹெல்த் டெக்னாலஜி நிபுணர்களால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனம், ‘ஃபிட்சென்ஸ்’. இதன் ஸ்மார்ட் வாட்ச்சுகள் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகின்றன. எஞ்சினியர்களும், ஹெல்த் டெக்னாலஜி நிபுணர்களும் சேர்ந்து உருவாக்கியிருப்பதால் ஒரு குடும்ப டாக்டர் போல செயல்படுகிறது இந்த வாட்ச். 24 மணி நேரமும் இதயத்துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும்,
இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவையும் கண்காணிக்கும் மானிட்டர், தண்ணீர் புகாத வடிவமைப்பு, ஹெச்டி கிளியர் டிஸ்பிளே, நடப்பது, ஓடுவது, உடற்பயிற்சி செய்வது மற்றும் தூங்குவதைத் துல்லியமாகக் கணக்கிடும் வசதி, அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால், எழுந்து நடக்கச் சொல்லும் அலாரம், போனுக்கு வரும் அழைப்புகள், நோட்டிஃபிகேஷனை வாட்ச் மூலமாகப் பார்க்கும் வசதி, நீண்ட நேரம் நிற்கும் பேட்டரி திறன்... என ஏராளமான நவீன வசதிகளைக் கொண்டிருக்கிறது இந்த வாட்ச். ஆப்பிள் வாட்ச்சைப் போல ஸ்டைலீஷாக டிசைன் செய்திருப்பது ஈர்க்கிறது. இதன் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.9,999. ‘ஃபிட்சென்ஸி’ன் தளத்தில் ரூ.2,499-க்கு கிடைக்கிறது.
 ஒயர்லெஸ் மவுஸ்
அதிக நேரம் லேப்டாப், ஐபேட் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களை மனதில் வைத்து ‘லாஜிடெக்’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்த ஒயர்லெஸ் மவுஸ். ‘சிக்னேச்சர் எம்650’ என்பது இந்த ஒயர்லெஸ் மவுஸ் மாடலின் பெயர். சிறிய, நடுத்தர, பெரிய என உள்ளங்கைகளுக்குத் தகுந்த மாதிரி மூன்று அளவுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் கையாள்வது எளிது. அத்துடன் நீண்ட நேரம் மவுஸைப் பயன்படுத்தினாலும் கை வலிக்காது.
மவுஸை வேகமாக ஸ்க்ரோல் செய்ய சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மவுஸை க்ளிக் செய்யும்போது சத்தம் எழுப்பாது. விண்டோஸ், மேக் ஓஸ், லினக்ஸ் என அனைத்து வகையான இயங்குதளங்களுக்கும் சப்போர்ட் செய்கிறது. ஒரு ‘AA’ பேட்டரியால் இயங்குகிறது இந்த மவுஸ். இரண்டு வருடம் வரை பேட்டரி தாங்கும் என்று உத்தரவாதம் அளிக்கிறது ‘லாஜிடெக்’. நீலம், கருப்பு, வெள்ளை, சிவப்பு என பல வண்ணங்களில் கிடைக்கிறது. விலை ரூ.3,000.

இயர்பட்ஸ்
மலிவான விலையில் தரமான இயர்பட்ஸை வாங்க விரும்புகிறீர்களா? உங்களுக்கான நல்ல சாய்ஸ் ‘ரெட்மீ பட்ஸ் 3 லைட்’தான் என்று கேட்ஜெட்ஸ் விமர்சகர்கள் அடித்துச் சொல்கின்றனர். அப்படி இதில் என்ன இருக்கிறது என்று தேடிப்பார்த்தால் ஆச்சர்யமே மிஞ்சுகிறது. ஆம்; மற்ற இயர்பட்ஸ்களுடன் ஒப்பிடும்போது இதிலுள்ள வசதிகள் வியப்பளிக்கின்றன. உதாரணத்துக்கு, இந்த இயர்பட்ஸை 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே போதும், 100 நிமிடங்கள் வரை இடைவிடாமல் இசையை ரசிக்க முடியும்.
மட்டுமல்ல; முழுமையாக சார்ஜ் செய்தால் 18 மணி நேரம் வரை இடைவிடாமல் இயங்குகிறது. எல்லா வகையான ஸ்மார்ட் போன்களுடனும் எளிதில் கனெக்ட் ஆகும் வகையில் ப்ளூடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது. தவிர, அழைப்பு வரும்போதோ அல்லது பாடலை மாற்றும்போதோ இயர்பட்ஸை விரல் நுனியில் தொட்டாலே போதும். உடனே செயல்பட ஆரம்பித்துவிடுகிறது. அந்தளவுக்கு நவீன டச் வசதி உள்ளது.
தூசு, தண்ணீர் புகாது. நாய்ஸ் கேன்சலேஷன் வசதி இருப்பதால் மக்கள் திரளுக்கு நடுவில் இருந்தாலும் கூட, போனுக்கு வரும் அழைப்பையோ அல்லது பாடல்களையே துல்லியமாகக் கேட்கலாம். இதன் எடை 36 கிராம் என்பதால் காதில் இருப்பதே தெரியாது. இதனை மாட்டிக்கொண்டு ஜாக்கிங் செய்யலாம்; வண்டி ஓட்டலாம். கீழே விழாது. அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.2,999. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ரூ.1,999-க்கு கிடைக்கிறது.
பிக்ஸல் போன்
‘கூகுள்’ நிறுவனத்தின் ‘பிக்ஸல்’ மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு எப்போதுமே தனி மவுசு. சமீபத்தில் ‘பிக்ஸல் 6ஏ’ என்ற மாடல் வெளியாகி விற்பனையை அள்ளி வருகிறது. ஐபோன்களுக்குப் போட்டியாக சந்தையில் இருக்கும் ஒரே மாடல் ‘பிக்ஸல்’தான் என்பது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை. ‘பிக்ஸல் 6ஏ’வில் இருக்கும் அம்சங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை உறுதி செய்வதாக இருக்கிறது.
கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் 6.10 இன்ச்சில் மெகா டிஸ்பிளே, 1080 X 2400 பிக்ஸலில் ஃபுல் ஹெச்டி ரெசல்யூசன், 12.2 எம்பி மற்றும் 12 எம்பியில் இரண்டு பின்புற கேமராக்கள், 8 எம்பியில் செல்ஃபி கேமரா, 128 ஜிபி ஸ்டோரேஜ், ஒரு நாள் முழுவதும் சார்ஜ் நிற்க 4410mAh திறன்கொண்ட பேட்டரி, இ-சிம் மற்றும் நானோ சிம் சப்போர்ட், ஒரு மீட்டர் ஆழத்திலுள்ள தண்ணீர் தொட்டிக்குள் போன் விழுந்துவிட்டாலும் கூட, 30 நிமிடங்கள் வரை தண்ணீர் புகாமல் தாக்குப் பிடிக்கும் திறன், அழகான வடிவமைப்பு என்ன கெத்து காட்டுகிறது ‘பிக்ஸல் 6ஏ’. வெள்ளை, சாம்பல் மற்றும் இளம் பச்சை வண்ணங்களில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்ட் 12 இயங்குதளத்துடன் வெளியாகியிருக்கும் இந்த போனின் விலை ரூ.43,999.
சார்ஜ் ஸ்டேஷன்
இதோ வந்துவிட்டது உங்களின் வீட்டிலுள்ள 6 விதமான கேட்ஜெட்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்வதற்கான நவீன சார்ஜர். இதை தயாரித்திருக்கிறது ‘போர்ட்ரானிக்ஸ்’ நிறுவனம். ‘யூஎஃப்ஓ ஹோம் சார்ஜர்’ என்பது இதன் பெயர். சார்ஜ் ஸ்டேஷன் போல இயங்கும் இந்த சார்ஜரில் 6 போர்ட்டுகள் உள்ளன. ஒவ்வொரு போர்ட்டிலும் ஒரு கேட்ஜெட்டை சார்ஜ் செய்யலாம். ஒரே நேரத்தில் 6 கேட்ஜெட்களை சார்ஜ் செய்தால் கூட, சார்ஜ் ஆகும் வேகம் குறைவதில்லை.
சார்ஜ் செய்யும்போது எதிர்பாராமல் நிகழும் வோல்டேஜ் மற்றும் மின் பிரச்னைகளிலிருந்து கூட உங்களின் கேட்ஜெட்களைப் பாதுகாக்கிறது இந்த சார்ஜர். எங்கே வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். ஸ்மார்ட்போன், டேப்லெட், ப்ளூடூத் ஹெட்செட், எம்பி3 பிளேயர், ப்ளூடூத் ஸ்பீக்கர்... என பல வகையான கேட்ஜெட்டுகளுக்கு சப்போர்ட் செய்கிறது. இதன் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.1,299.
ஏர் ப்யூரிைபயர்
நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்துக்கொண்டு செல்லும் ஒரு தேசமாக மாறி வருகிறது, இந்தியா. குறைந்தபட்சம் வீட்டுக்குள்ளாவது தூய்மையான காற்றைச் சுவாசிக்க வழி செய்யும் வகையில் சந்தையில் இறங்கியிருக்கிறது ‘மீ’ நிறுவனத்தின் ஏர் ப்யூரிபயர். இது காற்றிலுள்ள 99.97 மாசுகளைச் சுத்திகரித்து, காற்றைத் தூய்மையாக்கித் தருகிறது. வைரஸ், பாக்டீரியா, சிகரெட் புகை துகள்கள், பூச்சிகள் என 0.1 மைக்ரோன் அளவு வரைக்குமான மாசுகளைச் சுத்திகரிக்கிறது இந்த ப்யூரிைபயர்.
484 சதுர அடி பரப்பளவுக்குள், 360 டிகிரியில் காற்றை உள்ளிழுத்து, மூன்று விதமான படிநிலைகளில் காற்றைச் சுத்தம் செய்து கொடுக்கிறது. இதை ஸ்மார்ட் ஆப், அலெக்ஸா, கூகுள் அசிஸ்டெண்ட் மூலமாகவும் கட்டுப்படுத்த முடியும். இதன் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.12,999.
த.சக்திவேல்
|