வணக்கத்துக்குரிய 21 மேயர்கள்!



கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அளப்பரிய வெற்றியை ஈட்டியது. இதில் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. இதிலும் 20 மாநகராட்சிகளில் திமுகவைச் சேர்ந்தவர்கள் மேயர்களாக அலங்கரிக்க, ஒரு மாநகராட்சி திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது. மேயர்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் இதோ...

சென்னை மேயர் பிரியா ராஜன்

சென்னை துணை மேயர் மு.மகேஷ்குமார்

சென்னை மாநகராட்சிக்கு மூன்றாவது பெண் மேயராகவும், தலித் சமூகத்திலிருந்து முதல் பெண் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் 28 வயதான பிரியாராஜன்.  பெரம்பூரிலுள்ள மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த இவர், எம்.காம் பட்டதாரி. இவரது கணவர் ராஜா. ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தந்தை ராஜன் முப்பது ஆண்டுகளாக திமுகவில் இருக்கிறார். மட்டுமல்ல இவரின் மாமா செங்கை சிவம் இரண்டு முறை பெரம்பூர் தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருந்தவர்.

சென்னையின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மு.மகேஷ்குமார். சைதாப்பேட்டை சின்னமலைப் பகுதியைச் சேர்ந்த இவர் 169வது வார்டில் போட்டியிட்டார். இதில், 11 ஆயிரத்து 12 வாக்குகள் பெற்று அதிமுகவைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தார். பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் பி.ஏ பட்டதாரி. எளிமையானவர். ஏற்கனவே கவுன்சிலராக இருந்தவர்.  

தாம்பரம் மேயர் வசந்தகுமாரி

கடந்த ஆண்டுதான் தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் முதல் பெண் மேயராகிறார் திமுகவின் வசந்தகுமாரி. 25 வயதான இவர் பி.டெக் கெமிக்கல் எஞ்சினியரிங் படித்திருக்கிறார். தந்தை கமலக்கண்ணன் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் இருப்பவர். கணவர் கோகுல செல்வன். ‘குடிநீருக்கும், சாலைகளுக்கும், விளக்குகளுக்கும் முக்கியத்துவம் தருவேன்’ என்கிற வசந்தகுமாரி பதவியேற்க தன் தந்தை கமலக்கண்ணனுடன் டூவீலரில் வந்தார்.









ஓசூர் மேயர்  எஸ்.ஏ.சத்யா


ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவைச் சேர்ந்த எஸ்.ஏ.சத்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2019ல்தான் ஓசூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது சத்யா ஓசூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக ஆனார். அதற்குமுன் 2006ல் ஓசூர் நகராட்சித் தலைவராக பதவி வகித்தார். தற்போது திமுக மாநகரப் பொறுப்பாளராக இருக்கிறார்.


பேராச்சி கண்ணன்