பலூன் விற்பனை டூ மாடல்!
கடந்த மாதம் கேரளாவைச் சேர்ந்த வயதான கூலித்தொழிலாளி ஒருவர் மாடலாக மாறிய சம்பவம் பெரிய வைரலாகியது. அதே போல் ஒரு சம்பவம் இது. கேரளாவில் உள்ள அண்டலூரில் தெய்யம் திருவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. திருவிழாவின் முக்கிய காட்சிகளைப் புகைப்படமாக்குவதற்காக அண்டலூருக்குச் சென்றிருந்தார் அர்ஜுன் கிருஷ்ணன் எனும் புகைப்படக்கலைஞர். வேறு எதையும்விட திருவிழாவில் பலூன் விற்றுக்கொண்டிருந்த கிஸ்பு என்ற பெண்தான் அர்ஜுனைக் கவர்ந்திருக்கிறாள்.
ராஜஸ்தானைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் அனுமதியுடன் பல புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தட்டிவிட்டிருக்கிறார். ஒவ்வொரு புகைப்படமும் செம வைரலாக, ‘‘யார் இந்தப் பெண்..?’’ என்று பின்னூட்டங்கள் குவிந்திருக்கின்றன. அடுத்து அந்தப் பெண்ணின் பெற்றோரைச் சந்தித்து கிஸ்புவை முறைப்படி போட்டோஷூட் நடத்த அனுமதி வாங்கியிருக்கிறார் அர்ஜுன். அப்புறமென்ன... ஒப்பனைகளுடன் தேர்ந்த மாடல் போல பல போஸ்களைக் கொடுத்து இன்ஸ்டாகிராமைத் தன்வசமாக்கியிருக்கிறார் கிஸ்பு.
த.சக்திவேல்
|