Data Corner



*எறும்புகள் சிறியதாக இருந்தாலும், அதன் மூளை மிகவும் பெரியது. ஒவ்வொரு எறும்பும் 2.50 லட்சம் மூளை அணுக்களை கொண்டுள்ளது.

*இந்திய சிறைகளில் உள்ள 4 கைதிகளில் 3 பேர், விசாரணைக்கு உட்பட்ட கைதிகள் என்று சமீபத்தில் கிடைக்கப்பெற்ற 2020ம் ஆண்டுக்கான அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

*இந்தியாவில் 2.5 மில்லியன் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளனர்.

*உத்தரப்பிரதேசம் முழுவதும், 20 - 24 வயதுடைய 15.8% பெண்கள், 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்துள்ளனர். அதே நேரத்தில் இதில் தேசிய சராசரி 23.3% என்று தரவு காட்டுகிறது.

*புதிய பேனாவை வாங்குபவர்களில் 95% பேர் தங்கள் பெயரைத்தான் முதலில் எழுதுவார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

*உயிரினங்களிலேயே மனிதர்கள் மட்டும்தான் தூக்கத்தை தள்ளிப் போடுகிறார்கள்.

*இங்கிலாந்தில் 1486-ம் ஆண்டு நடந்த மன்னர் 7ம் ஹென்றியின் திருமணத்தில் முதல்முறையாக வாணவேடிக்கை நடத்தப்பட்டது.

*கடந்த 2019 - 20ம் ஆண்டில் கிராமப்புற இந்தியாவில் விவசாயம் மிகப்பெரிய வேலைவாய்ப்பாக இருந்தது. அரசுத் தரவுகளின்படி 61.5% தொழிலாளர்கள்
விவசாயத்தில் ஈடுபட்டனர்.

சுடர்க்கொடி