ஆனந்த அதிர்ச்சி!



-ரீடர்ஸ் வாய்ஸ்

எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அளந்த ராதாநாத் சிக்தாரை வரலாறு பதிவு செய்யாதது பெரும் பிழை. அவருக்கு அளிக்கப்படும் அங்கீகாரமே இதற்கு சரியான பாவ விமோசனம். அரசு சர்வே  துறை ஊழியரான நான் குங்குமத்தில் ராதாநாத் சிக்தார் குறித்து படிக்கும்வரை எவரெஸ்ட்டை அளந்தவர் ஜார்ஜ் எவரெஸ்ட் என்றே நினைத்திருந்தேன்.
- மனோகர், கோவை. ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

‘அறிந்த இடம் அறியாத விஷய’த்தில் ஓஎம்ஆரின் கட்டுரை ஏராள டேட்டாவில் ஆனந்த அதிர்ச்சி தந்தன. ஓஎம்ஆர் உருவான பின்னணி வியக்க வைத்தது.
- இரா.வளையாபதி, கரூர். ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

களிமண் பூக்களாக இருந்தாலும் சுபயின் க்ளே பொக்கேக்கள் கைவண்ணத்தில் நெஞ்சம் கவர்ந்தன.
- ஆர்.சண்முகராஜ், சென்னை - 19. மயிலை கோபி, அசோக்நகர்.

ஒவ்வொரு படத்திலும் தன் கேரக்டரை முன்னிலைப்படுத்தும் ஜெயம் ரவியின் கடின உழைப்பில் உருவாகியுள்ள ‘வனமகன்’ ஆச்சரிய மகன்.
- மகிழை. சிவகார்த்தி, புறத்தாக்குடி.

வா.மு.கோமுவின் ‘மண்டை மாக்கான்’ சிறுகதை ஜாலி லவ் ஸ்டோரி, ப்ளஸ் யோசிக்கவும் வைத்தது.
- டி.சங்கரன், ராமாபுரம் - 3.

‘கவிதை வன’த்தில் ‘சந்திப்பு’ கவிதையில் ‘காற்று வெளியிடை’ படத்தின் ஸ்டில் அசத்தல். காதலும் காதல் நிமித்தமுமான கவிதை அருமை.
- விஜயநிர்மலன், சென்னை - 24.

பெட்டிச்செய்தியாக பல குட்டிச்செய்திகள் வயிற்றிலே பல்ப் எரிய வைத்தன.
- ஜானகி ரங்கநாதன், சென்னை - 4.

துப்பாக்கி குண்டுகள் சத்தத்துடன் ‘காட்ஃபாதர்’ மிரட்டல். அரஸ் ஓவியங்கள் அசத்தல்.
- த.சத்தியநாராயணன், சென்னை.

தகிக்கும் கோடையில் வேப்பிலை உடையில் க்யூட் பெண்ணின் படத்தை பிரசுரித்து எங்களை இப்படியா சூடேற்றிவிடுவது? ‘வரலாற்றில் கோடை’ என்ற ஸ்பெஷல் ஸ்டோரி மறக்கமுடியாத வரலாற்றுப் பதிவுகள். நீரை மருத்துவ நீராக மாற்றலாம் என்ற ரஞ்சித்தின் கட்டுரை கோடைக்கான குளுகுளு வெரைட்டி. ரமணன் பேச்சு, மக்களின் தவறுகளை சுட்டிக்காட்டியது. கோடை உணவுக்குறிப்புகள் அருமை. கோடை ஸ்பெஷல் ஸ்டோரி, அசல் சம்மர் சமூகசேவைதான். - விஜயநிர்மலன், சென்னை - 125. மனோகர், கோவை. சிவகார்த்தி, புறத்தாக்குடி. நடராஜன், சிதம்பரம். குமார், விழுப்புரம் - 2. சிவகுமார், சென்னை - 33. லட்சுமிநாராயணன், வடலூர். த.சத்தியநாராயணன், சென்னை - 72. சங்கீத சரவணன், மயிலாடுதுறை. எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.

உத்தமர் ஓமந்தூரார் பற்றிய புதிய செய்திகளை யுகபாரதியின் ‘ஊஞ்சல் தேநீர்’ உலகுக்கு உணர வைத்துள்ளது. ஓமந்தூராரின் நீர்வளத் திட்டங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
- சண்முகராஜ், சென்னை - 19. ஆர்.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.