வங்கி வேலையை உதறினேன்!



தமிழ் சினிமாவில் புது ரத்தம்

மாநகரம் - லோகேஷ் கனகராஜ்

‘‘படம் ரிலீஸ் அன்னிக்கு நிறைய இயக்குநர்கள் பாராட்டினாங்க. ஷங்கர் சார் ட்வீட் பண்ணியிருந்தார். ரஜினி சார், ‘Extraordinary கண்ணா...’னு என்கரேஜ் பண்ணினார். சந்தோஷமா இருக்கு...’’ உற்சாகமாகப் பேசுகிறார் லோகேஷ் கனகராஜ். குறும்படத்திலிருந்து பெரிய திரைக்கு வந்தவர் இவர். ‘‘பூர்வீகம் கோவை. எம்பிஏ படிச்சிருக்கேன். மாசம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்துல பேங்க்ல வேலை கிடைச்சது. கை நிறைய சம்பளம் கிடைச்சாலும், nine to six  வேலை செய்யறதுல இஷ்டமில்ல.

வங்கி வேலைல இருக்கும் போது ஷார்ட் ஃபிலிம்ஸ் இயக்க ஆரம்பிச்சேன். என்னோட ‘அச்சம் தவிர்’ குறும்படத்தை கார்த்திக் சுப்புராஜ், சி.வி.குமார்னு நிறைய பேர் பாராட்டினாங்க. மேரேஜ் ஆன டைம்ல வேலையை ரிசைன் பண்ணிட்டு கார்ப்பரேட் ஃபிலிம்ஸ் பக்கம் கவனம் செலுத்தினேன்.

அந்த நேரத்துல ‘களம்’னு ஒரு குறும்படம் இயக்கினேன். ‘அவியல்’ படத்துல நாலு குறும்படங்கள்ல ஒண்ணா அதுவும் வந்தது. அப்புறம்தான் ‘மாநகரம்’ கதை ரெடி பண்ணினேன்...’’ எனச் சொல்லும் லோகேஷ், அடுத்தும் பொட்டன்ஷியல் ஸ்டூடியோவிற்கே படம் இயக்குகிறார். ஹீரோ யாரென இன்னும் உறுதியாகவில்லை. ‘‘ஸ்கிரிப்ட் ஒர்க் நடக்குது...’’ என்கிறார் சிரித்துக்கொண்டே! 

-தொகுப்பு: மை.பாரதிராஜா