சமந்தா வைத்த சவால்!
எத்தனையோ இக்கட்டான சூழல்களைக் கடந்து தனக்கென ஒரு கூட்டத்தையே செட் செய்து பின்னர் திருமணம், அதில் பிரிவு என்றிருந்தாலும் எங்கேயும் சமந்தா துவண்டு போனதே இல்லை.
தனது ரசிகர்களை அவ்வப்போது ஏதேனும் ஜாலியான டான்ஸ் அல்லது ஒர்க் அவுட் சேலஞ்ஜ்கள் வைத்து குஷிப்படுத்தி பாஸிட்டிவ் எனர்ஜியாக வலம் வருவதுதான் சமந்தாவின் சமத்து!
அப்படித்தான் சில வாரங்களுக்கு முன் ‘ஜம்ப் அப் சேலஞ்ஜ்’ என ரிஸ்க்கான ஜம்ப் ஸ்குவாட் உடற்பயிற்சி ஒன்றை அப்லோட் செய்து தனது ரசிகர்களுக்கு (#levelupchallenge) சேலஞ்ஜ் கொடுத்தார்.
அவரே பின்னர் ‘அரபிக் குத்து...’ பாடல் சேலஞ்ஜ் கொடுத்து நடனமாடினார். இப்போது ஒர்க் அவுட்டில் இன்னும் வித்தியாசமாக ‘ஸ்டிக் சேலஞ்ஜ்’ கொடுத்திருக்கிறார். அதாவது சமந்தாவின் ஃபிட்னஸ் டிரெய்னர் ஒரு நீண்ட குச்சியால் சமந்தாவைத் தொட முயற்சிக்க சமந்தா அந்தக் குச்சி மேலே படாமல் வளைந்து நெளிந்து எஸ்கேப் ஆகிறார். உடலின் வளையும் தன்மை மற்றும் ஒருமித்த மனநிலையை இந்த ஒர்க் அவுட் மூலம் பெற முடியுமாம்!
ஷாலு
|