கங்கனா vs அலியா!
சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி விவாதங்களைக் கிளப்பிக்கொண்டிருக்கும் இந்திப்படம், ‘கங்குபாய் கத்தியவாடி’. விமர்சகர்கள் பலரும் இதில் கங்குபாயாக நடித்த அலியா பட்டின் நடிப்பை புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் படம் வெளியான அன்றே ‘‘200 கோடி ரூபாய் சாம்பலாகப் போகிறது...’’ என்று படத்தின் பட்ஜெட்டைக் குறித்து தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் கேலி செய்திருந்தார் கங்கனா ரணாவத்.
 மட்டுமல்ல, அலியா பட்டையும் வெகுவாக சாடியிருந்தார் கங்கனா.ஆம்; ‘‘அப்பாவோட தேவதை. வசீகரிக்கக்கூடிய அழகுதான். ஆனால், முட்டாள் பெண். கங்குபாய் படத்தோட முக்கியமான வீழ்ச்சியே அலியா பட்டை நாயகியாக தேர்வு செய்ததே..’’ என்று ஏகத்துக்கும் அலியாவை கேலி செய்திருந்தார் கங்கனா. இதற்கு எதிர்ப்புகள் வந்தாலும், நெப்போடிஸத்துக்கு எதிரானவர்கள் கங்கனாவுக்கு ஆதரவாகவும் பின்னூட்டம் அளித்தனர்.
‘‘எதிர்மறையான விஷயங்களுக்கு நான் எந்த பதிலும் அளிப்பதில்லை...’’ என்று அலியா பட்டும் தன் பங்குக்கு எதிர்வினை ஆற்றியுள்ளார். இதற்கு கங்கனா என்ன சொல்லப்போகிறார் என்று இணைய உலகமே காத்துக்கொண்டிருக்கிறது.
த.சக்திவேல்
|