மா ஓரி பாலிமெரா



குறைந்த பட்ஜெட்டில் நிறைய புதுமுகங்களை வைத்து தரமான திரில்லிங் படமாக வெளியாகியிருக்கிறது ‘மா ஓரி பாலிமெரா’. ‘ஹாட்ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது இந்த தெலுங்குப் படம்.
ஆட்டோ ஓட்டி பிளாப்பை நடத்தி வருகிறான் கொமிரி. அவனது தம்பி போலீஸாகிவிடுகிறான். பதின் பருவத்திலிருந்தே பிளாக் மேஜிக் எனும் மந்திர, தந்திரங்களில் கைதேர்ந்தவன் கொமிரி.
ஆனால், கொமிரியின் மந்திர வித்தைகளைப் பற்றி யாருக்கும் தெரியாது. ஊரே அவனை ஓர் அப்பாவியைப் போல அணுகுகிறது.

இந்நிலையில் தனக்கு எதிராக செயல்பட்ட அனைவரையும் தனது மந்திர சக்தியால் மறைமுகமாகப் பலி வாங்கிக்கொண்டே வருகிறான் கொமிரி. ஒரு நாள் கொமிரி காணாமல் போய்விடுகிறான்.

கொமிரி இறந்துவிட்டான் என்ற தகவல் போலீஸாக இருக்கும் தம்பிக்குக் கிடைக்கிறது. அண்ணனின் மரணத்துக்குப் பின்னணியை விசாரிக்கப் போகும் தம்பிக்குக் கிடைக்கும் உண்மைகள்தான் மர்ம திரைக்கதை. ஒரு வித்தியாசமான திரை அனுபவத்தைக் கொடுக்கிறது இந்தப் படம். நடிகர்கள் ஒவ்வொருவரும் கதாபாத்திரங்களாகவே மனதில் பதிகிறார்கள். படத்தின் இயக்குநர் அனில் விஸ்வநாத்.