ஃபேமிலி பேக்
‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி டிரெண்டிங் அடித்துக்கொண்டிருக்கும் கன்னடப் படம், ‘ஃபேமிலி பேக்’. அபி சிறுவனாக இருக்கும்போதே அவனுடைய அம்மாவும் அப்பாவும் விவாகரத்து பெற்று விடுகின்றனர். அம்மாவுடன் ஆறு மாதம், அப்பாவுடன் ஆறு மாதம் இருக்கிறான். அப்பா அடுத்த திருமணம் செய்துகொள்கிறார். இருந்தாலும் வழக்கம் போலவே அப்பாவுடன் அபி ஆறு மாதம் இருக்க வேண்டும்.
 அபி வளர்ந்து கல்லூரிக்குச் செல்கிறான். அப்போது அப்பா இரண்டாவது மனைவியைப் பிரிந்து மூன்றாவதாக திருமணம் செய்துகொள்கிறார். வெறுத்துப் போகும் அபி, தனியாக ஒரு வீடு எடுத்து தங்குகிறான். கல்லூரியில் ஒரு பெண் மீது காதல் வயப்படுகிறான். ஆனால், அந்தப் பெண் வேறு ஒருவனுடன் பழகுகிறாள்.
விரக்தியடையும் அபி தனது வீட்டின் மேல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறான். அப்போது ஒருவர் வந்து அபியைக் காப்பாற்றுகிறார். அபியைக் காப்பாறியவர் யார்... அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன... என்பதே சுவாரஸ்யமான திரைக்கதை. குடும்ப உறவுகள் ரொம்பவே முக்கியமானது என்று நகைச்சுவையாகச் சொல்லியிருக்கும் இப்படத்தின் இயக்குநர் அர்ஜுன் குமார்.
|