ஹோம் மேட் புகாட்டி!



படத்தில் நீங்கள் பார்ப்பது உலகிலேயே விலையுயர்ந்த கார்களில் ஒன்றான புகாட்டி அல்ல. இது ஹோம் மேட் புகாட்டி!ஆட்டோமொபைல் துறையினரையும், சமூக வலைத்தளங்களையும் வியப்பில் ஆழ்த்தும் சம்பவம் இது. வியட்நாமைச் சேர்ந்த இளம் நண்பர்களுக்கு கார் என்றால் உயிர். அதிலும் சூப்பர் காரான புகாட்டியைச் சொந்தமாக்க வேண்டும் என்பது அவர்களுக்கு பெருங்கனவு.

ஆனால், 21 கோடி ரூபாய் மதிப்புள்ள புகாட்டியை வாங்கும் அளவுக்கு அவர்களிடம் பணம் இல்லை. இருந்தாலும் புகாட்டியைச் சொந்தமாக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் தீரவில்லை.
உடனே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார்கள். சூப்பர் கார் உருவாக்குவது சம்பந்தமான எல்லா விவரங்களையும் கரைத்துக் குடித்தனர். களிமண், பைபர் கிளாஸ், பழைய தகரங்கள், ஸ்டீலைக் கொண்டு சூப்பர் காரை வடிவமைத்தனர்.

இந்தக் காரைத் தயாரிக்க சரியாக ஒரு வருடம் ஆகியிருக்கிறது. அச்சு அசல் புகாட்டியைப் போலவே இருக்கும் இந்தக் காரின் தயாரிப்பு செயல்முறையை வீடியோவாக்கி
யூடியூப்பில் தட்டிவிட்டிருக்கின்றனர். 45 நிமிடங்களுக்கு மேலாக ஓடும் அந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் எல்லாரும் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.

த.சக்திவேல்