எஸ்கேப் ரூம் 2 டோர்னமென்ட் ஆஃப் சாம்பியன்ஸ்
மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியாகி வசூலைக் குவித்தது ‘எஸ்கேப் ரூம்’ எனும் ஆங்கிலப் படம். சமீபத்தில் இதன் அடுத்த பாகமான ‘எஸ்கேப் ரூம்: டோர்னமென்ட் சாம்பியன்ஸ்’ வெளியாகி பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. தமிழ் டப்பிங்கில் ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது இந்தப் படம்.ரயிலில் உள்ள ஒரு பெட்டிக்குள் ஆறு இளைஞர்களும், இளைஞிகளும் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். திடீரென அவர்கள் பயணிக்கும் பெட்டி மட்டும் தனியாக ஒரு பாதையில் செல்கிறது.
 என்ன செய்வதென்று தெரியாமல் அந்த ஆறு பேரும் பீதியடைகின்றனர். ஓர் இடத்தில் அந்த ரயில் பெட்டி நிற்கிறது. அதன் எந்தக் கதவும் திறப்பதில்லை. எங்கு தொட்டாலும் மின்சாரம் பாய்கிறது. எஸ்கேப் ரூமில் மாட்டிக்கொண்டோம் என்று அவர்கள் உணர்கின்றனர். கடுமையான போராட்டத்துக்குப் பிறகு உயிரைப் பணயம் வைத்து ரயில் பெட்டியில் இருந்து தப்பித்தால் அதைவிட இன்னொரு ஆபத்தான இடத்தில் மாட்டிக்கொள்கின்றனர். இப்படி பல புதிரான இடங்களிலிருந்து ஆறு பேரும் தப்பித்தார்களா... இந்த எஸ்கேப் ரூமின் பின்னணி என்ன... என்பதற்கு பதில் சொல்கிறது திரைக்கதை. படத்தின் இயக்குநர் ஆடம் ராபிட்டெல்.
தொகுப்பு: த.சக்திவேல்
|