Data corner
 *‘பியூ ரிசர்ச் சென்டர்’ என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி, 12 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரில் 1000க்கு 785 பேர் செல்போன்கள் வைத்திருக்கிறார்கள். அதுபோன்று பதின்ம வயதினரில் நான்கில் ஒருவர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். *அரபு மற்றும் பாரசீக நாடுகளைச் சேர்ந்தவர்கள், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கச்சா எண்ணெயை பல்வேறு வகைகளாகப் பிரிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.
*பல்லாயிரம் ஆண்டுகளாக கப்பல்கள் இருந்தாலும், 16ம் நூற்றாண்டு முதல்தான் அவை அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
*நியூஜெர்ஸி நகரில் உள்ள அருங்காட்சி யகத்தில் 5,400 அரிய ஸ்பூன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
*தமிழகத்தில் மதுப்பிரியர்களின் விகிதம் 46.7% ஆக இருந்த நிலையில், அது இப்போது 25.4% ஆகக் குறைந்திருப்பது பெரிய அளவில் சரிவைக் காட்டுகிறது.
*அமெரிக்க அதிபர்கள் பலர் (7 பேர்) ஜூலை மாதத்தில்தான் இறந்துள்ளனர்.
*2019 - 20ம் ஆண்டில் தேசிய குடும்ப நலத்துறை நடத்திய ஆய்வில், கேரளத்தில் வெறும் 19.9% ஆண்களும், 0.2% பெண்களும், அதுவும் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் மதுகுடிப்போராக உள்ளனர்.ஆனால், அதற்கு முனபு, 2015 - 16ம் ஆண்டுகளில் நடந்த ஆய்வில், 37 % ஆண்களும், 1.6 % பெண்களும் 15 - 49 வயதுக்குட்பட்டவர்கள் மதுப்பிரியர்களாக இருந்துள்ளனர் என்கிறது புள்ளிவிவரம்.இவ்விரு புள்ளிவிவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், சுமார் 46% அளவுக்கு கேரளத்தில் மதுப்பிரியர்கள் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
*காகங்கள் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை உயிர்வாழும்.
சுடர்க்கொடி
|