6க்கு 19 செய்த உதவி



ஐரோப்பா எங்கும் கண்ணீருடன் உச்சரிக்கும் ஒரு பெயர், லாங்ஃபோர்டு.  இங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்த லாங்ஃபோர்டுக்கு வயது 19. எலும்பு புற்றுநோய் முற்றிய பிறகுதான் அவருக்கு அந்தக் கொடிய நோய் இருப்பதே தெரியவந்தது. ‘‘குணப்படுத்துவது கடினம். இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது.
இன்னும் சில மாதங்களே லாங்ஃபோர்டு உயிருடன் இருப்பார்...’’ என்று கடந்த வருடமே மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். மாதங்கள் வேகமாக ஓடின. பூமியில் இன்னும் சில நாட்களே லாங்ஃபோர்டு இருப்பார் என்ற நிலையும் வந்தது. நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் எல்லோரும் லாங்ஃபோர்டிடம், ‘‘கடைசி ஆசை என்ன...’’ என்று கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இங்கிலாந்தில் ஜேக்கப் என்ற 6 வயது சிறுவன் தன்னைப்போலவே புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதை அறிந்தார் லாங்ஃபோர்டு. அத்துடன் ஜேக்கப்பின் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் தேவை என்ற செய்தியும் அவருடைய காதுகளுக்கு எட்டியது. உடனே நிதி திரட்ட ஆரம்பித்துவிட்டார். தனது வாழ்வின் இறுதிக் காலங்களில் சுமார் 60 லட்ச ரூபாயைத் திரட்டி ஜேக்கப்பின் சிகிச்சைக்குக் கொடுத்த லாங்ஃபோர்டு - கடந்த வாரம் இறந்துவிட்டார்...