மகான்
தந்தை - மகனுக்கு இடையிலான ஆடு புலி ஆட்டமே ‘மகான்’. நேரடியாக ‘அமேசான் பிரைமில்’ இந்தத் தமிழ்ப் படம் வெளியாகி யிருக்கிறது.காந்தி மகானின் (விக்ரம்) குடும்பமே காந்தியவாதிகள். சிறுவயதிலிருந்தே மிகுந்த கட்டுப்பாட்டோடு காந்தி வளர்க்கப்படுகிறார். வளர்ந்து திருமணமாகி, ஒரு பையனும் பிறந்த பிறகு காந்தியின் வாழ்க்கையே ஒருநாள் மாறுகிறது. மனைவியும் மகனும் அவரை விட்டுப் பிரிகிறார்கள்.
 தன் நண்பன் சத்யவானுடன் (பாபி சிம்ஹா) சேர்ந்து மதுபானத் தொழில் அதிபராகிறார் காந்தி. 20 வருடங்களுக்குப் பிறகு காந்தியின் மகன் தாதாபாய் நெளரோஜி (துருவ்) திரும்பி வருகிறார். அதுவும் தன் தந்தை காந்தி + சத்யவானின் சாராய சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்தும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக. ஒட்டுமொத்தப் படத்தையும் தோளில் சுமந்து செல்கிறார் காந்தியாக வரும் விக்ரம். அட்டகாசமான நடிப்பு. அதற்கு அடுத்த இடத்தில் துருவ் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். இப்படி நடிகர்களின் நல்ல நடிப்பு, டெக்னிக்கல் அம்சங்கள் என பல பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தும் திரைக்கதை பலவீனமாக இருப்பதால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இன்னும் உழைத்திருக்கலாம்.
|