ஹிருதயம்
திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘ஹிருதயம்’. இப்போது ‘ஹாட்ஸ்டாரி’லும் காணக்கிடைக்கிறது. கேரளாவில் பிறந்து, வளர்ந்தவர் அருண் நீலகண்டன். சென்னையில் உள்ள ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில் படிப்பதற்காக வருகிறார் அருண்.
 கல்லூரியின் ஹாஸ்டல் வாழ்க்கை, அங்கே கிடைக்கும் புதிய நண்பர்கள், மலரும் முதல் காதல், அந்தக் காதல் முறியும்போது நேர்கின்ற பிரச்னைகள், படிப்பில் கடைசி நிலையில் இருக்கும் அருணுக்கு உதவும் தமிழ் நண்பர்கள் மற்றும் நான்கு வருடங்களாக அவனைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும், சென்னை வாழ்க்கையும் அருணின் எதிர்காலத்தை எப்படி வடிவமைக்கிறது என்பதே உணர்வுபூர்வமான திரைக்கதை. வழக்கமான கல்லூரிக் கால கதை என்று ஒதுக்கிவிட முடியாதபடி, கல்லூரி நினைவுகளை அருமையாக சித்தரித்திருக்கிறது ‘ஹிருதயம்’. படம் பார்க்கும்போது ஒவ்வொருவரும் தங்களின் கல்லூரி நாட்களுக்குள் திரும்பிச்சென்ற உணர்வை ஒரு நிமிடமாவது அனுபவிக்க முடியும். முக்கியமாக இதுவரை தமிழ்ப் படங்களில் கூட காட்டாத சென்னை வாழ்க்கையின் சில அற்புத பகுதிகளைக் காட்டியிருப்பது சிறப்பு. அருண் நீலகண்டனாக பட்டையைக் கிளப்பியிருக்கிறார் பிரணவ் மோகன்லால். படத்தின் இயக்குநர் வினீத் சீனிவாசன்.
|