Data Corner



*2020ம் ஆண்டு டிசம்பா் மாதம் சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை 4,88,511 ஆக அதிகரித்தது. இது 2019ம் ஆண்டைவிட 1.5% அதிகம்.

*இந்தியாவில் நகர்ப்புறப் பகுதிகளில் இருந்து மட்டும் ஒரு நாளில் 72,368 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாகிறது.

*நுரையீரல் புற்றுநோய் என்பது ஒட்டுமொத்த புற்றுநோயில் 19% மக்களைத் தாக்குகிறது.

*கடந்த 2020ம் ஆண்டு வேலையின்மையின் காரணமாக நாடு முழுவதும் 3,548 பேர் தற்கொலை செய்து கொண்டதாக ஒன்றிய அரசு புள்ளிவிவரம் கொடுத்துள்ளது. கடனை திரும்பச் செலுத்த முடியாததன் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு 4,970 பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், 2019ம் ஆண்டு 5908 பேர் தற்கொலை செய்து கொண்டிருந்தனர். இந்த
எண்ணிக்கை 2020ம் ஆண்டு 5213 ஆக பதிவாகி உள்ளது.

*கால்பந்து விளையாட்டு, சீனாவில் கி.மு. 476ம் ஆண்டில் முதல்முறையாக விளையாடப்பட்டது.

*எலிகளின் பற்கள் ஆண்டுக்கு 5 அங்குல நீளம் வரை வளரும் தன்மை கொண்டது.

*2020ம் ஆண்டில் 29,768 குற்ற வழக்குகளில் சிறார்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும், அவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட 35,352 சிறார்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அறிக்கையின்படி, 842 கொலை வழக்குகள், 981 கொலை முயற்சி வழக்குகள், 9,287 திருட்டு, களவு, வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள், 937 பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகளில் சிறார்கள் ஈடுபட்டுள்ளனர்.

*கடந்த ஐந்து ஆண்டுகளில் கொடுங்குற்ற வழக்குகளில் தமிழ்நாட்டு சிறார்களின் பங்களிப்பு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னணியில் இருப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் 2016 முதல் 2020 வரையிலான ஆண்டுகளில் முறையே 48, 53, 75, 92, 104 கொலை வழக்குகளில் சிறார்கள் ஈடுபட்டுள்ளனர்.

சுடர்க்கொடி