உலகின் வயதான விலங்கு!
உலகம் முழுவதும் உள்ள விலங்கியல் ஆர்வலர்களின் மத்தியில் ஜோனாதன் எனும் ஆமைக்கு நல்ல மவுசு. காரணம், விரைவிலேயே மனிதர்களுடன் நட்புடன் பழகக்கூடிய அதன் தன்மை. கடந்த வாரம் மேலும் ஒரு சிறப்பைப் பெற்றிருக்கிறது ஜோனாதன்.
 ஆம்; ‘உலகிலேயே அதிக வயதான வாழும் விலங்கு’ என்று கின்னஸ் கமிட்டி ஜோனாதனைக் கௌரவித்துள்ளது. ஜோனாதனின் முதிர்ச்சி, உடலமைப்பு ஆகியவற்றை வைத்து 1832ல் பிறந்திருக்கலாம் என்று உயிரியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். அவர்களின் கணிப்புப்படி கணக்கிட்டாலே ஜோனாதனுக்கு 190 வயதாகிவிட்டது.
ஆனால், கின்னஸ் கமிட்டியோ ஜோனாதனுக்கு 190 வயதுக்கும் அதிகமாக இருக்கலாம். தவிர, இதுவரை பூமியில் பிறந்த ஆமைகளிலேயே அதிக வயது வாழ்ந்தது ஜோனாதனாகத்தான் இருக்கும் என்றும் சொல்லியுள்ளது. 1882ம் வருடம் செஷேல்ஸ் தீவிலிருந்து செயின்ட் ஹெலெனா தீவிற்கு இடம்பெயர்க்கப்பட்ட ஜோனாதன் இன்னும் அங்கேயேதான் வசித்து வருகிறது.
|