5 வயது நிருபர்!



காஷ்மீர் எங்கும் ஹபிஷா என்ற சிறுமியைப் பற்றித்தான் ஹாட் டாக்.

கடந்த சில நாட்களாக ஹபிஷா வசித்து வரும் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழை. அதனால் அவளுடைய வீட்டுக்குச் செல்லும் பாதை சிதைந்துவிட்டது. பாதையைச் சரிசெய்ய அரசும் முன்வரவில்லை. இந்தச் சூழலை உலகுக்குத் தெரிவிக்க நினைத்திருக்கிறாள் சிறுமி ஹபிஷா. உடனே ஒரு நிருபராக மாறிவிட்டாள். ஆம்; பனிப்பொழிவு மற்றும் மழையால் தன் வீட்டுக்குச் செல்லும் பாதை எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அழகான மழலைக் குரலில் ஹபிஷா விவரிக்க, அதைப் பின்தொடர்ந்து வந்த அவளுடைய அம்மா வீடியோக்கிவிட்டார்.

இந்த இரண்டு நிமிட வீடியோவை சமூக வலைத்தளங்களில் தட்டிவிட, வைரலாகிவிட்டாள் ஹபிஷா. அத்துடன் ‘‘5 வயது நிருபர்...’’ என்று பலரும் ஹபிஷாவைப் பாராட்டி வருகின்றனர். இப்போது இந்தியாவின் பல முன்னணி பத்திரிகைகள் ஹபிஷா மற்றும் அவளது அம்மாவின் நேர்காணலைப் பதிவு செய்துவருகின்றன. போதாதா... சாலையை சரிசெய்யப்போவதாக மேலதிகாரிகள் உறுதியளித்திருக்கிறார்கள்.

த.சக்திவேல்