எறிடா படத்தின் இயக்குநர் வி.கே. பிரகாஷ்.



ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் படம் பார்க்க வேண்டுமா? உடனே ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகியிருக்கும் ‘எறிடா’வைப் பாருங்கள். மலையாளம், தமிழில் காணக்கிடைக்கிறது.
பெரும் பணக்காரர் ஷங்கி. சூதாட்டத்தில் கெட்டிக்காரர். 60 வயதான அவர், 20 வயதான அனுவைத் திருமணம் செய்திருப்பது பலருக்கு அவர் மேல் பொறாமையை உண்டாக்குகிறது.
ஒரு சூதாட்டத்தில் தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் இழக்கிறார் ஷங்கி. கடைசியில் அனுவை பந்தயமாகக் கட்டி இழந்ததை மீட்கிறார். இந்தப் பந்தயத்தில் ஷங்கிக்கு பல கோடி ரூபாய் கிடைக்கிறது. அந்தப் பணத்தில் பாதியைக் கேட்கிறாள் அனு. மறுத்துவிடுகிறார் ஷங்கி.

இன்னொரு பக்கம் அந்தப் பணத்தைக் கொள்ளையடிக்க ஒரு திருடன் வீட்டுக்குள் புகுந்துவிடுகிறான். அப்போது அனு மட்டுமே வீட்டில் இருக்கிறாள். ஷங்கியையும், அந்தத் திருடனையும் மீறி தனக்குச் சேர வேண்டிய பணத்தை எப்படி அனு அடைகிறாள்... உண்மையில் அவள் எதை எதிர்பார்த்தாள்... அவளுக்குக் கிடைத்தது என்ன... என்பதே சஸ்பென்ஸ் திரைக்கதை.

அடுத்த நிமிடம் என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியாத அளவுக்குத் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. ஷங்கியாக நாசரும், அனுவாக சம்யுக்தா மேனனும் கலக்கியிருக்கிறார்கள்.