த ஹார்டர் தே ஃபால் படத்தின் இயக்குநர் ஜேமிஸ் சாமுவேல்.



இசையும், ஆக்‌ஷனும் கலந்த கலவையாக ருசிக்கிறது ‘த ஹார்டர் ேத ஃபால்’. ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது இந்த ஆங்கிலப்படம்.தனது பெற்றோருடன் வீட்டில் உணவருந்திக் கொண்டிருக்கிறான் சிறுவன் நாட் லவ். அப்போது வீட்டுக்குள் தனது குழுவுடன் நுழைகிறான் கொடூரமான கொள்ளைக்காரனான ரூபஸ். சற்றும் எதிர்பாராத நேரத்தில் நாட் லவ்வின் பெற்றோர்களைச் சுட்டு வீழ்த்துகிறான். அத்துடன் நாட் லவ்வின் நெற்றியில் கத்தியைக் கொண்டு சிலுவைக் குறியீட்டைச் செதுக்குகிறான்.

இந்தச் சம்பவம் நாட் லவ்வின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடும் கவ்பாயாக வளர்கிறான் நாட் லவ். தான், செய்த குற்றங்களுக்காக சிறையில் இருக்கிறான் ரூபஸ். ஒரு நாள் ரயிலில் ரூபஸைக் கொண்டு செல்கிறார்கள். அப்போது அங்கு விரையும் அவனது குழு, ரயிலுக்குள் புகுந்து ரூபஸைக் காப்பாற்றி வெளியே கொண்டுவருகிறது.

ரூபஸ் வெளியே வந்த விஷயம் நாட் லவ்விற்குத் தெரிய வருகிறது. தனது குழுவுடன் சேர்ந்து ரூபஸை நாட் லவ் எப்படி பழி தீர்க்கிறான் என்பதே திரைக்கதை.
ஜாலியாக ஒரு ஆக்‌ஷன் படம் பார்க்க விரும்புபவர்களுக்கு இந்தப் படம் நல்ல சாய்ஸ்.