சீட்டிமார்



படத்தின் இயக்குநர் சம்பத் நந்தி.

கடந்த வாரம் ‘ஹாட் ஸ்டாரி’ல் வெளியாகி பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் தெலுங்குப் படம், ‘சீட்டிமார்’.  வங்கி ஊழியர் கார்த்தி. வேலை நேரம் போக மீதி நேரத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் பெண்கள் கபடிக்குழுவின் பயிற்சியாளராக இருக்கிறார். அவருடைய கிராமத்தைச் சேர்ந்த ஏழ்மையான பெண்கள்தான் கபடிக்குழுவில் இருக்கின்றனர். அந்தப் பெண்களை வைத்து
தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றால் கிராமத்துக்கு நல்ல பெயர் கிடைக்கும்; அந்தப் பெண்களின் எதிர்காலமும் அவர்கள் படித்த பள்ளியும் சிறப்பு பெறும் என்று நினைக்கிறார்.

தேசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டிக்காக தில்லிக்குத் தன் குழுவுடன் செல்கின்றார் கார்த்தி. அங்கே இருக்கும் தாதா போலீஸ் மக்கான் சிங் கார்த்தியின் குழுவில் பெண்களைக் கடத்திவிடுகிறான். எப்படி அந்தப் பெண்களை மீட்டு, தேசிய சாம்பியன் பட்டத்தைப் பெற   வைக்கிறார் கார்த்தி என்பதே ஆக்‌ஷன் திரைக்கதை. தெலுங்கிப் படத்துக்கே உரிய மசாலாவுடன் பெண்ணியம் சார்ந்த விஷயங்களையும் பேசியிருப்பது சிறப்பு. கார்த்தியாக ஆக்‌ஷனில் மிரட்டியிருக்கிறார் கோபிசந்த்.

தொகுப்பு: த.சக்திவேல்