வலைப்பேச்சு
@_David_twits - எளிமையான வாழ்க்கைக்காகப் பிரார்த்தனை செய்யாதீர்கள். கடினமான வாழ்க்கையை எதிர்கொள்ள பலத்தைக் கேளுங்கள்...
@Saravanakarthikeyan Chinnadurai - நெடுங்காலம் முன் நிஜ உலகில் தொலைத்து விட்ட இளமையை மத்திம வயதில் ஃபேஸ்புக்கில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
@prabhu65290 - தன்னைத் தானே தேற்றிக்கொள்ளும் ஒருவருக்கு உண்மையான பலமே அதுதான்.
@Kannan_Twitz - கையில காசு இருந்தா நல்ல ஒரு மட்டன் பிரியாணி! காசு கம்மியா இருந்தா இரண்டு வடை ஒரு ஸ்ட்ராங் டீ! அவ்வளவுதான் வாழ்க்கை!
@Kozhiyaar - கணவன் மனைவிக்கு இடையே சிறந்த புரிதலின் பொருள், ‘இத இனிமே திருத்த முடியாது’ என்பதே!
@Ramanujam Govindan - மனைவி எப்பவுமே மனைவிதான்! உங்கள் மனைவி குடிக்கப் போகும் காப்பியில் விஷம் கலந்திருப்பதைக் கடைசி நொடியில் கண்டு பிடித்து ‘சந்திரமுகி’ ரஜினி மாதிரி பாய்ந்து பறந்து அவர் கையில் இருக்கும் கோப்பையைத் தட்டி விடுகிறீர்கள். நிம்மதிப் பெருமூச்சு விட்டு மனைவியிடம் உண்மையைச் சொல்கிறீர்கள். மனைவியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? ‘‘விஷம் கலந்திருக்குன்னு சொன்னா போதாதா? நல்ல கப்பை உடைச்சிட்டிங்களே! எப்பதான் உங்களுக்குப் பொறுப்பு வருமோ?’’
@prabhurc4497 - உன்னைப் புரிந்துகொள்ளாத எதுவும் உன்னிடம் நிலைப்பதில்லை, உன்னைப் புரிந்துகொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை...
@Bogan Sankar - ‘‘வருஷத்துக்கு இவ்வளவு காதல் தோல்வி அடையறதுன்னு ஏதாவது டார்கெட் வச்சிருக்கீங்களா?’’ ‘‘முந்தி வச்சிருந்தேன். டார்கட்டை ரீச் பண்ணலைன்னா ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆயிடுது. ஸோ, இப்போ எல்லாமே டார்கட் ஃப்ரீ அப்ரோச்தான்!’’
@ramesh_twetz - அடியே, ‘நாம அந்த நட்சத்திர ஜோடிய போல நண்பர்களா இருக்கலாமா’னுதான் கேட்டேன்... விவாகரத்தெல்லாம் கேட்கலடி... என்னைய விட்டுடு!
@Vinayaga Murugan - ஏண்டா..? நல்லா வளர்ந்துட்டு வர்ற. டீம் முழுக்க உன்னைப் பத்திதான் பேச்சு. உன்னோட பேர்கூட புரொமோஷன் லிஸ்ட்ல இருக்கு. வேணா ஒருவாரம் லீவு எடுத்துட்டு ஊட்டி, கொடைக்கானல்னு போய் சுத்திட்டு வா. ஆன்சைட் கூட அனுப்பறோம். எதுக்கு இந்த வாட்ஸ்அப் வாயனுங்க பேச்சை கேட்டுகிட்டு ஐடி வேலையை ரிசைன் செஞ்சுட்டு இயற்கை விவசாயம், ஆடுவளர்க்கனு போற? இதை எல்லாம் சொல்ற உங்க அண்ணன் என்ன ஆடா மேய்க்கிறார்..? இசுசு கார்ல போகலை..? (தட் ஒரு பொறுப்பான மேனேஜரா பேசுற மொமண்ட்)
@balasubramni1 - எவ்வளவு நேரம் குனிந்து புத்தகம் படிச்சாலும் கழுத்துல வலி இல்லை. ஆனால், பத்து நிமிசம் குனிந்து செல்போன் பார்த்தாலே கழுத்து வலிக்குது. நம்ம உடம்பு கூட நமக்கு நல்லதுக்கு மட்டும்தான் ஒத்துழைப்பு தருது என்பதே உண்மை.
@Annaiinpillai - கறி வாங்கிக் கொடுத்துடுவோம்... பிரியாணி செய்வாங்கன்னு நினைப்போம்... ஆனா, கடைசியில தோசைமாவு பாக்கெட்தான் ஃபிர்ட்ஜ்ல இருந்து வெளியே வரும்...
தமிழ்ச்செல்வி தி - உங்கள் அரசியல் நிலைப்பாடு எதுவாகவும் இருக்கட்டும். மனிதர்கள் மீது காரை ஏற்றிக் கொல்வதை எப்படி உங்களால் ஆதரிக்க முடிகிறது? போராட்டக்காரர்கள் விவசாயிகளா இல்லையா என்பதை விவாதிக்கும் முன் நீங்கள் மனிதர்கள்தானா என்று உங்களையே ஒருமுறை கேட்டுப் பாருங்கள்.
@GreeseDabba2 - மழை வரணும்னு வேண்டி ஆண்கள் மட்டும் 101 ஆடுகளை வெட்டி அம்மனுக்கு கறி விருந்து படைச்சு சாப்பிட்டுருக்காங்க - செய்தி. இதைப் பார்த்தா மழைக்காக வேண்டின மாதிரி தெரியலையே...
@Kozhiyaar - மனைவி பயன்படுத்தும்போது வேலை செய்யாத Credit Card இருந்தால், கணவர்களின் மகிழ்ச்சிக்கு அளவேதும் இருக்காது!
@JamesStanly - கட்சி செயற்குழு கூட்டம் ரத்தாம்... எதுக்காம்..? வாட்சப் சர்வர் டவுனாம் மாமா!
@ItsJokker - வாட்ஸ்அப் டவுனாம். சங்கீஸ் - வாட்ஸ்அப்ல ஜீ யோட வளர்ச்சி பிடிக்காம அமெரிக்காகாரன் செய்ற சதி சார்...
@ItsJokker - உத்தரப் பிரதேசத்துல விவசாயிகள கார் ஏத்தி கொலை பண்ணிருக்காங்களே... சங்கீஸ் - செத்தவன விடுங்க... இனிமே ஹாரன்ல இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே ஒலிக்கணும்னு புதிய சட்டம் போட்டுருக்காங்களே... ஜீ மட்டும் இல்லன்னா...
@Ram Vasanth - தலைவி: நீ பண்ண தப்பை மன்னிச்சிடறேன். குடிக்க தண்ணி எடுத்துட்டு வா... மீ: நான் என்ன தப்பு பண்ணேன்? தலைவி: எதாவது பண்ணி இருப்ப... போய் எடுத்துட்டு வா!
@அ. பாரி - தன் கல்லூரித் தோழிகள் எல்லோரிடமும் நீண்ட நாள் கழித்து போனில் ஒரு ரவுண்ட் வலம் வந்த அம்மணிக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது, நமக்கு வாய்த்த அடிமையே ஆகச் சிறந்தது என்று. நான் கேட்காமலேயே டீ வந்துச்சு.
@Srinivasan Balakrishnan - ரெண்டு பேரும் மனம் ஒத்துப் பிரிவதால, ரெண்டு பேருமே தங்களோட அறிக்கைல பேர மட்டும் கொஞ்சம் வரிசை மாத்திப்போட்டிருக்காங்க… ஐடிக்காரனுங்களான நாங்கதான் இப்டின்னா சினிமாகாரனுங்க நீங்களும் இப்டியா..? காப்பி பேஸ்ட் பரிதாபங்கள்!
|