அறிமுகம்-குந்தவையா நடிக்கணும்!



பெயர்?

நயனா சாய்.

உங்களைப் பற்றி!
சொந்த ஊரு பெங்களூரு. அப்பா அலி பிசினஸ் மேன். அம்மா ரேணுகா ஹெச்.ஆர் டிபார்ட்மென்ட், மேலும் அவங்களும் பிஸினஸ்தான். படிக்கும்போதிருந்தே நடிப்பு, மாடலிங்லே நிறைய ஆர்வம் உண்டு.17 வயசிருக்கும் போது மாடலிங், தொடர்ந்து நிறைய பியூட்டி போட்டிகள், ரேம்ப் வாக் என ஆரம்பித்து மிஸ் கர்நாடகா, மிஸ் இந்தியா வேர்ல்ட், குயின் ஆஃப் இந்தியா, மிஸ் சவுத் இந்தியா டாப் 10, மிஸ் டிவா போட்டி... இப்படி நிறைய பியூட்டி ராம்போ நிகழ்ச்சிகள், டைட்டில்கள் கிடைச்சது. தொடர்ந்து சினிமா ஆசையும் எட்டிப்பார்க்க அதற்கான முயற்சியில் இறங்கினேன்.

தமிழ் சினிமா?

வழக்கம் போல மாடலிங் என் சினிமா பாதைக்கு வழி வகுத்துச்சு. முதல் படம் கன்னடத்தில் ‘ஒம்பதன்னெ அட்புதா’. 2019ல் அந்தப் படம் ரிலீஸ் ஆச்சு. தமிழில் ரெண்டு படம் நடிச்சிட்டு இருக்கேன். என்ன படம், என்ன கேரக்டர் எல்லாமே விரைவில் வெளியாகும். இப்ப சொல்லிட்டா அப்ப என்னைய பேட்டி எடுக்க மாட்டீங்கல்ல! முறைப்படி ஆக்டிங் கிளாஸ் எல்லாம் கூட போயி கத்துக்கிட்டேன்.

டிரீம் ரோல்?

‘பொன்னியின் செல்வன்’ கதையிலே குந்தவை கேரக்டர் ரொம்ப பிடிக்கும். அடுத்து வேலு நாச்சியார் கேரக்டர். இந்த மாதிரி வரலாற்றுச் சிறப்பான கேரக்டர்கள் செய்யணும்.
கிரஷ்?

தனியா யாரும் இல்லை. ஆனா, எந்த ஹீரோ தன்னுடைய ஹீரோயினுக்கு சமமான கேரக்டர் கொடுக்க சம்மதிக்கிறாங்களோ அவங்கல்லாம் ஸ்பெஷல்தான்.

டயட் சீக்ரெட்?

யோகா, டயட் எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வேன். முடிஞ்சவரை வீட்டு சாப்பாடு.

நடிப்பைத் தவிர?

நிறைய புத்தகங்கள் படிப்பேன். தற்காப்புக் கலை கத்துக்கிட்டு இருக்கேன். நிறைய கத்துக்கறதுக்கான தேடல் என்கிட்ட இருக்கு.

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்?

‘நடிகையர் திலகம்’ படத்திலே ‘மகாநதி...’ பாடல். எப்பவுமே ஒரு தோரணை, என்னால் முடியும்ங்கற நம்பிக்கைய உண்டாக்கும்.
உடைகள்:  ட்லைட் பொட்டிக் @dlight_boutique
மேக்கப் & ஸ்டைலிங்: ரம்யா அழகேந்திரன் (dlightbridalstudio)
லொகேஷன் உதவி: லைட்ஸ் ஆன் ஸ்டூடியோ (lights_on_studio_wedding)
ஸ்பெஷல் ஸ்பான்சர்: SS ஹைதராபாத் பிரியாணி        

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்