Data Corner



*சுற்றுச்சூழல் மாசு தொடா்பான சட்டங்களின்கீழ், 2020ல் 61,767 வழக்குகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் இந்தச் சட்டத்தின்கீழ் 42,756 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம்.

*காரில் செல்வதாக இருந்தால், மணிக்கு 80 மைல் வேகத்தில் அதை ஓட்டிச் சென்றால் 4 மாதங்களில் நிலவை அடையலாம்.

*இரண்டாம் உலகப் போரின்போது 1.5 மில்லியன் குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

*55 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட வெள்ளை மாளிகை கட்டடத்தை பராமரிக்க ஆண்டொன்றுக்கு 1.6 மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படுகிறது.

*மனிதர்களைவிட 8 மடங்கு கூர்மையான பார்வையை கழுகுகள் கொண்டுள்ளன. 3.2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முயல்களைக்கூட அவற்றால் பார்க்க முடியும்.

*மனித இனம் பிழைத்திருக்க நாம் தந்திருக்கும் விலை இதுவரை 5 லட்சம் உயிரினங்கள் என்கிறது, சூழலியல் சேவைகளின் அறிவியல் கொள்கைகளுக்கான சர்வதேச அமைப்பு நடத்திய ஓர் ஆய்வு.

*உலகில் சுமார் 1,500 எரிமலைகள் உள்ளன.

*ஆரஞ்சு பழத்தின் தலைநகரமாக பிரேசில் நாடு விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் 17.8 மில்லியன் டன் ஆரஞ்சு விளைகிறது.

சுடர்க்கொடி