ஹிட்லரின் ராணுவத்தில் பயிற்சி பெற்ற Biker Gangஐ அழிக்கும் அஜித்! வலிமை Exclusive



‘வேண்டும்... வேண்டும்... அஜித்தின் வலிமை அப்டேட் வேண்டும்..!’
இப்படி ரசிகர்கள் தெருவில் இறங்கிப் போராட்டம் மட்டும்தான் நடத்தவில்லை. மற்றபடி அத்தனை சம்பவங்களும் நடத்தி விட்டனர். அதற்கேற்ப மோஷன் போஸ்டர் ரிலீஸ் என திடீர் இன்ப அதிர்ச்சியாக களமிறக்கினர். போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹியூமா குரேஷி, கார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வலிமை’. இதோ இப்போது சுடச் சுட அடுத்த டிரீட் கிளிம்ப்ஸ்.

அது என்ன கிளிம்ப்ஸ்?
இந்த கலாசாரம் ஹாலிவுட்டைச் சார்ந்தது. ஜேம்ஸ் பாண்ட் 007 படங்கள், மார்வெல் போன்ற படங்களுக்கு இப்படியான கிளிம்ப்ஸ் வெளியிடுவது வழக்கம்.

டீஸருக்கும் கிளிம்ப்ஸுக்கும் உள்ள வேறுபாடு நேரமும், எடிட்டிங்கும்தான். கிளிம்ப்ஸில் முதலும் இருக்காது முடிவும் இருக்காது. அனைத்தும் அரைகுறையாக சொல்லப்பட்டு செல்லும்.
இப்போது வெளியாகியிருக்கும் அஜித்தின் ‘வலிமை’ கிளிம்ப்ஸ் இதன் அடிப்படையில் வெளியானதே. அஜித்தின் டிரேட்மார்க் பைக் ரேஸ் ஸ்டண்ட் காட்சிகளுடன் ஆரம்பிக்கும் வீடியோவில் பற்றி எரியும் நெருப்பு, அதற்கிடையில் வெளிப்படும் தல அஜித் என ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது.

இந்நிலையில்தான் படத்தின் ரிலீஸ் எப்போது என்ற கேள்விக்கு இப்போது பொங்கல் என விடையளித்திருக்கிறார்கள். ஆரம்பம் முதல் ‘வலிமை’ தீபாவளி ரிலீஸ் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் ‘அண்ணாத்த’, தீபாவளி ரிலீஸ் என போஸ்டர் அறிவிப்புடன் ஏற்கனவே வெளியாகிவிட்டதால் ‘வலிமை’யை பொங்கலுக்கு லாக் செய்திருக்கிறார்கள்.

ரைட். விஷயத்துக்கு வருவோம். யார் இந்த சாத்தான்களின் அடிமைகள்..?

எப்போதும் ஹீரோவின் வசனம், அல்லது ஹீரோவின் மாஸ் ஆக்‌ஷன் காட்சியுடனேயே ஒரு படத்தின் டீஸர், டிரெய்லர், புரமோஷன் ஆரம்பிக்கும். மிகச்சில படங்களில்தான் வில்லன் கோணத்தில் ஆரம்பிக்கும். ‘வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் கூட வில்லன், மற்றும் வில்லன்களின் குழு கோணத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அப்போது ‘சாத்தான்களின் அடிமைகள்’ என்னும் வசனம் இடம்பெற்றிருக்கிறதே... அதுதான் சுண்டி விட்டதுபோல் ‘வலிமை’ எப்படிப்பட்ட படம் என்பதை சொல்லாமல் சொல்கிறது.

யெஸ்... விஷயம் அறிந்தவர்கள் ‘சாத்தான்களின் அடிமைகள்’ என்னும் வசனம் கிளிம்ப்ஸில் ஒலித்ததுமே சட்டென ஜெர்க் ஆகி இரண்டாம் உலகப் போருக்கும் ஹிட்லரின் போர்ப் படைக்கும் பயணப்பட்டு அங்கிருந்து டிராவலாகி 1967ம் வருடத்துக்கு சென்று விடுவார்கள்!  ஆம். ‘சாத்தான்களின் அடிமைகள்’ என்னும் தமிழ் வார்த்தையின் ஆங்கில வடிவமான ‘சாத்தான் ஸ்லேவ்’ என்பதற்கும் 2ம் உலகப் போருக்கும், பைக் கிளப்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

1967ல் இங்கிலாந்தில் உருவான பைக் க்ளப்தான் ‘சாத்தான் ஸ்லேவ்’. இதை உருவாக்கியவர்களும், உருவாக்கியவர்களுக்கு பின்னணியில் இருந்தவர்களும் ஹிட்லரின் போர்ப் படையில் தனிப்பிரிவாக இயங்கியவர்கள். இங்கிலாந்தில் உருவான ‘சாத்தான் ஸ்லேவ்’ மெல்ல மெல்ல கிளை பரப்பி இப்போது உலகளவில் சட்டத்துக்கு உட்பட்டும் சட்டத்துக்குப் புறம்பாகவும் பரவியுள்ளனர். சாம்பிளுக்கு ஒரேயொரு சம்பவம். ஜார்ஜ் ரிச்சி என்னும் தலைவனைக் கொண்டு இயங்கிய ‘சாத்தான் ஸ்லேவ்’ என்னும் பழைய கேங், திருட்டு, கடத்தல், போதை, ஆயுதக் கடத்தல் எனத்துவங்கி பாலியல் துன்புறுத்தல் உட்பட பல சர்வதேச குற்றங்களைச் செய்து வந்தனர்.

பெட்டி என்னும் பெண் தைரியமாக, தான் ஆறு வயதிருக்கும் போது ஜார்ஜ் மூலம் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்களை பட்டியலிட்டார். இந்த பெட்டி என்னும் பெண், ஜார்ஜுக்கு உறவுக்காரர் என்பதுதான் சோகம். பெட்டியின் வாக்குமூலத்தை அடுத்து ஜார்ஜ் கைதானார். இது ‘சாத்தான் ஸ்லேவ்’ வரலாற்றின் ஒரு துளிதான். இதுபோல் எண்ணற்ற சம்பவங்கள் ‘சாத்தான் ஸ்லேவ்’ தொடர்பான ஆவணங்களில் உண்டு.  இந்த ‘சாத்தான் ஸ்லேவ்’ ஜஸ்ட் லைக் தட் லெதர் ஜாக்கெட், பூட்ஸ் சகிதமாக ‘பறக்கும் ராஜாளியே...’ என பைக்கில் சுற்றும் கேங் அல்ல.

சாத்தானின், அதாவது ஹிட்லரின் அடிமைகள். ஹிட்லர் உருவாக்கிய கொடூர ராணுவ குழுக்களில் இந்த பைக்கர் கேங் பயிற்சி பெற்றவர்கள். கொலையை கச்சிதமாகச்
செய்யும் கயவர்கள்.இப்போதும் இந்தக் குழு உலகெங்கும் இயங்கி வருகிறது. ஜாக்கெட்டில் டேஞ்சர், மண்டை ஓட்டு படம் போட்டு ‘சாத்தான் ஸ்லேவ்’ என்பதைக் குறிக்கும்  ‘எம்.சி’ என்று எழுதி இருப்பதுதான் இவர்களின் அடையாளம்.

ஹார்லி டேவிட்சன் வகை நீளமான பைக்குகள், வெறித்தனமான ரேஸ், அதனால் சண்டை, கொலை வரை செல்லத் துணிந்த இக்குழுக்களைச் சேர்ந்த பலர் மீது வழக்குகள் உள்ளன. போலவே சிலர் 10 முதல் 15 வருடங்கள் வரை சிறைத் தண்டனை அனுபவித்தபடி இருக்கிறார்கள்.‘த ஹெல்’ஸ் ஏஞ்சல்ஸ்’, ‘மங்கோல்ஸ்’, ‘அவுட்லாஸ் எம்.சி’, ‘ரிபெல்ஸ்’, ‘பண்டிடோஸ்’ என உலகளவில் பல பெயர்களில் பைக்கர் குழுக்கள் இருப்பினும் அனைத்திற்கும் மூலம் இந்த சாத்தான் ஸ்லேவ்கள்தான்.

இவர்களிடமிருந்து பிரிந்தவர்கள் தனித்தனி குழுக்களாக இப்போதும் இயங்கி வருகிறார்கள்; குற்றங்களைப் புரிந்து வருகிறார்கள். குறிப்பாக போதைக் கடத்தல் இவர்கள் மீது நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக பதியப்பட்டு வருகின்றன. ஆக, இவையனைத்தும் ‘வலிமை’யில் இருக்கலாம். அல்ல. ‘வலிமை’ கிளிம்ப்ஸில் வில்லன் கார்த்திகேயன் பேசும் வசனத்தின்போது அவரது வலதுபுறம் ஒரு மண்டை ஓட்டு சிம்பல் இருப்பது இதற்கு வலு சேர்க்கிறது. எது எப்படியோ, எங்களுக்கு கிளிம்ப்ஸ் வந்திடுச்சு. நெக்ஸ்ட் டீசர், சாங்ஸ் எப்போ? வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறார்கள் தல ரசிகர்கள்.  

ஷாலினி நியூட்டன்