வலைப்பேச்சு



@Bogan Sankar - ‘என்ன சார் அந்நியன் மாதிரி பெண்களுக்கு எதிரா, ஆதரவான்னு மாத்தி மாத்தி எழுதிட்டிருக்கீங்க?’
‘நான் பெண்களுக்கு எதிரா  எழுதறதுக்குக் காரணம் பெண்கள். ஆதரவா எழுதறதுக்குக் காரணமும் பெண்கள்தான்...’
‘முதப் பொண்ணு உங்க சம்சாரம். புரியுது. இரண்டாவது பொண்ணு யாரு?’

@naaraju - ஆமா... அதென்ன தாஜ்மஹால் ரோடு..? திருச்சில ஏதுய்யா தாஜ்மஹால்!

@GreeseDabba2 - என்று ஒரு ஆண் தனக்கு வரும் போன் அழைப்புகளை வீட்டில் ஸ்பீக்கர் போனில் போட்டு பேசும் அளவு மனைவியின் மனநிலை முன்னேறுகிறதோ, அன்றுதான் இந்தியாவிற்கு உண்மையாக சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்.

@Ramanujam Govindan  - முகநூல் ஆண்களின் (நான் உட்பட) புரோட்டோகால்:
ஒரு பதிவை பார்த்த உடன் -
1. பதிந்தவர் ஆணா ?
பெண்ணா? எனப் பார்க்கவும்.
2. பெண் என்றால் ❤ போடவும் .
3. பின் என்ன பதிவு எனப் பார்க்கவும்.
4. ஆண் என்றால் என்ன பதிவு எனப் பார்க்கவும்.
5. ‘நான் நோபல் பரிசு பெற்றிருக்கிறேன்...’ என இருந்தால் பெரிய மனது பண்ணி லைக் போடவும்.
6. இல்லையேல் கண்டுகொள்ளாமல் கடந்து போகவும்!

@sankariofficial - குளிப்பதற்கு அழும் குழந்தைதான், ‘நல்ல பிள்ளை நீ, அழாமல் குளி’
என்று சொல்லி அழகாகக் குளிப்பாட்டுகிறது தன் பொம்மையை!

@mohanramko - 10 ஆண்டுகளில் காலத்தால் அழிக்க முடியாத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது - எடப்பாடி பழனிச்சாமி.
தலைவரே, பால் பாக்கெட் போட்டதையும் சேர்த்து தானே...

@balebalu - நாடு முழுவதும் மக்களுக்கு ஆயுஷ்மான் சுகாதார அடையாள அட்டை - பிரதமர்.
அடுத்து என்ன? அந்த அட்டையை ஆதாரோடு இணைக்கணும்... பிறகு பேங்க் அக்கவுண்ட், பான் நம்பருடன் இணைக்கணும்... அதானே?

@Kozhiyaar - திருமணமான பெண்கள் தினமும் அவர்கள் அம்மாவிடம் பேசாமல் இருந்தாலே வீட்டில் முக்கால்வாசி சண்டைகள் நடவாது!

@Kozhiyaar -
அண்ணனும்
தங்கையும் வீட்டில் இருக்கும்போது
‘தளபதி’யின் முதல் பாதி சூர்யா, தேவா மாதிரி சண்டை போட்டுக்கிறது... வெளியே போனால் பின்பாதி சூர்யா, தேவா போல் நடிப்பது வாடிக்கை!

@Vkarthik_puthur - நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம் - எடப்பாடி பழனிசாமி.
அப்படி போட்டிருந்தால் நீங்களே மாட்டிக்குவீங்கன்னுதான் எந்த வழக்கும் போடலையோ?!

@GreeseDabba2 - இளையராஜா இசையை கேட்பதை நிறுத்தும் வரை, முன்னாள் காதலியின் நினைவுகளிலிருந்து தப்பிக்கவே முடியாது.

@LAKSHMANAN_KL - திமுகவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்! - எடப்பாடி பழனிசாமி.
‘ஆன்லைன் கிளாஸ்’ மூலமாவா..?!

@இந்திரா கிறுக்கல்கள் - ஒன்சைட் லவ்வுல ஒருத்தன் நம்மளை ரசிக்கிற மாதிரி வர்ற கனவெல்லாம் எம்புட்டு அபூர்வம் தெரியுமா? கெரகம் புடிச்சவனுக எழுப்பிவிட்டுட்டானுக...

@kumarfaculty - உண்மையாலுமே கருமையான தலைமுடி உள்ளவர்களையும் சந்தேகப்பட வைத்து விடுகிறது ஹேர் டை!

@ItsJokker - ட்ரெயின்ல ஊருக்கு போறவனுக்கு டிக்கெட் 30 ரூ.
ஏத்தி விடப் போனவனுக்கு ப்ளாட்பார்ம் டிக்கெட் 50 ரூ. நல்லா இருக்குடா உங்க டீலிங்கு.

@Patham_tweets - USல ஒருத்தனும் கண்டுக்கவே இல்லைனு ஃபோன் போட்டு ஒரே அழுகை... ரிட்டர்ன் வரும்போது உனக்கு விதவிதமா ஷோ காட்டுறோம்னு சொன்னதும்தான் சமாதானமே ஆகியிருக்காரு!

@தீபு ஹரி -
பெரும்பான்மை (99.9%) ஆண்கள் தத்திகள். பெண்களைவிட புறணி பேசுகிறவர்கள். Mental strength என்பது ஒற்றைக் கூந்தலளவு கூட இல்லாதவர்கள். நவீன உலகிற்கான சாமர்த்தியமோ அல்லது சமூக கூட்டமைப்பு வாழ்விற்கான அடிப்படையான பண்புகளோ இயல்பிலேயே இல்லாதவர்கள். Semi barbarians with technical knowledge என்று சொல்லலாம். இதெல்லாம்
கொஞ்சம் அவர்களுக்கு தெரிய வருகிறபோது (உத்தேசமாக ஒரு 35 வயது) இந்த கடுமையான தாழ்வு மனப்பான்மையிலிருந்து தப்பிக்கத்தான் galaxy, fossil, quantum mechanics, இலக்கியம், ஈர வெங்காயம் என்று ஏதேதோ செய்கிறார்கள்.

@ItsJokker - பொண்டாட்டி இல்லாமல் கூட இருந்துவிடுவார்... ஆனால், போட்டோகிராபர் இல்லாமல் இருக்க மாட்டார்... அவர் யார்?

@sultan_Twitz - தேசத்துக்காக ரெஸ்ட் எடுக்காம 24 மணி நேரமும் கடுமையா உழைக்கிறாரு...
ஜிதானே மாப்ள..?
ஜியா..? போட்டாகிராஃபர் மாமா..!

@raji_dreams - இழக்க இனி ஏதும் இல்லை என்பவனுக்கு அதன் பின் உண்டாகும் வாழ்வில் துணிவு சற்று அதிகமே...

@Subbumeil - வயதாக ஆக அனுபவம் அதிகரிக்கிறதோ இல்லையோ பயம் அதிகரிக்கிறது.

@anand17m - எல்லாவற்றுக்கும் மனைவியிடம் சாரி கேட்பவனே நல்ல சம்சாரி...

@thoatta - ஒரு வாழ்த்து இல்ல... ஒரு வரவேற்பு இல்ல... கொஞ்சம் கூட மரியாதை இல்ல... எல்லா கோட்டையும் அழி... நான் திரும்ப ஃப்ளைட்ல file பார்க்கிறேன்...

@Gokul Prasad - “என்ன சார் இது, இரத்தம் தெறிக்கத் தெறிக்க இவ்வளவு வயலன்ட்டா ஒரு கதை எழுதிக் கொடுத்திருக்கீங்க?”
“நீதானப்பா காதல் கதை வேணும்னு கேட்ட..?”