அறிமுகம்-பேயை காதலிக்கும் ஸ்கூல் பொண்ணு!



பெயர்..?
வந்தனா சிவகுமார்.
உங்களைப் பற்றி சொல்லுங்க..?

சொந்த ஊர் ஈரோடு கோபிசெட்டிபாளையம். சின்ன வயசுல இருந்தே ஷூட்டிங் பார்த்து வளர்ந்த பொண்ணு. அப்பா சிவகுமார் பிசினஸ்மேன். அம்மா காயத்ரி ஸ்கூல் டீச்சர். எனக்கு 17 வயசு ஆகுது. நான் ஸ்கூல்ல படிக்கிறேன். ஆமா... நான் 2K கிட். என் நடிப்பு ஆசைக்கு இப்ப வரை அப்பா, அம்மா, நந்தினி மேம், எல்லாரும் செம சப்போர்ட்.
முதல் பட அனுபவம்..?

நாலாவது படிக்கும் போதே ‘கடிகார மனிதர்கள்’ படத்துக்காக டப்பிங் பேசியிருக்கேன். அப்ப ஆரம்பிச்ச பயணம்... சின்ன வயசுல இருந்தே நடிப்பு மேல தீராத காதல். அதன் விளைவா ‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’ படத்திலே எனக்கு ஒரு சின்ன ரோல் கிடைச்சது. கார்த்தி சார், ஜோதிகா மேம் நடிச்ச ‘தம்பி’ல டீன் வயசு நிகிலா விமல் பாத்திரத்தில் நடிச்சிருந்தேன்.
‘ஆகாசவாணி’ குறும்பட ஹீரோயினான எனக்கு அந்தப் படத்துக்காக பெஸ்ட் ஷார்ட் பிலிமுக்கான கேன்ஸ் விருது கூட கிடைச்சிருக்கு. இப்ப ‘பேய் காதல்’ படத்துல நடிச்சுட்டு இருக்கேன். ‘குள்ளநரி கூட்டம்’ இயக்குநர் பாலாஜி சார் இயக்கத்தில் ‘திருடர்கள் தேவை’ படத்திலும் ஹீரோயினா நடிச்சிருக்கேன்.
டிரீம் ரோல்..?

நல்ல நடிகைனு பெயர் வாங்கணும். இப்போதைக்கு அது மட்டும்தான் மனசுக்குள்ளே ஓடிட்டே இருக்கு. அதேசமயம் படிப்பையும் சரியா முடிக்கணும். எனக்கு விஸ்காம் படிக்கணும்னு ஆசை. இயக்குநர் கனவெல்லாம் கூட இருக்கு!
பிடித்த நடிகர்..?  நடிகை..?

ஸ்டைலுக்கு ரஜினி சார். டான்சுக்கு விஜய் சார். மாஸுக்கு அஜித் சார்... இப்படி ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒவ்வொரு விஷயம் ரொம்பப் பிடிக்கும். அதேபோல பெஸ்ட் நடிகைகள் எல்லார் படமும் பார்ப்பேன். எல்லார் கூடவும் ஒரு ரவுண்டு வரணும்.
உங்க டயட் சீக்ரெட்..?

ஏரோபிக் கிளாஸ் போயிட்டு இருக்கேன். கூடவே ஜும்பா கிளாஸும். ஃபிட்னஸ் பிடிக்கும் - அது டான்ஸா இருந்தாதான்!
அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்..?

செம்ம பீட்டா டான்ஸ் ஆட வைக்கிற எல்லா பாட்டும் என் தலைக்குள்ள சுத்திக்கிட்டே இருக்கும்.
உடைகள்: ட்லைட் பொட்டிக் @dlight_boutique

மேக்கப் & ஸ்டைலிங்: ரம்யா அழகேந்திரன் (dlightbridalstudio)
லொகேஷன் உதவி: லைட்ஸ் ஆன் ஸ்டூடியோ (lights_on_studio_wedding)
மாடல் உதவி: நந்தினி

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்