வலைப்பேச்சு



@amuduarattai - மொபைல் நம் கையில் இருந்தால், ஊர் உலகத்தில் என்ன  நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிய வேண்டுமெனில், நம் கையிலிருக்கும் மொபைலை கீழே வைக்கத்தான் வேண்டும்.

@Sen Balan - ‘களவாணி’ படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி வரும். தங்கள் திருட்டை மறைக்க கஞ்சா கருப்பு வாயில் நஞ்சை ஊற்றி, அவர்களே மருத்துவமனையிலும் சேர்ப்பார்கள். சிலநேரம் நினைப்பதுண்டு, இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டாலும் எத்தகைய வன்மமான காட்சி என. இன்று அக்காட்சியை எடப்பாடியார் நேரில் நிகழ்த்திவிட்டார்.

@Paadhasaari Vishwanathan - மனதின் திரை என மயங்காதே... மனமே திரை.

@Bogan Sankar - Crush. ஒரு கவிஞனால் ரசிக்கப் படவேண்டும் என்று பெண் விரும்புகிறாள். ஒரு ரசிகையால் விரும்பப் படவேண்டும் என்று கவிஞன் நினைக்கிறான். இரண்டும் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வேகமாக வரும் ரயில்கள்.

@Mariano Anto Bruno - அரசு ஊழியர்கள் வேலை செய்வதில்லை, அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் வேஸ்ட் என்று சொல்பவர்கள் ஒரே நாளில் 28 லட்சம் தடுப்பூசிகளைப் போட்டது அரசு ஊழியர்களா அல்லது பேய், பிசாசு, பூதம், குட்டிச்சாத்தான், யட்சிணி, ஏவல், பில்லி, சூனியம் மூலம் தடுப்பூசிகள் போடப்பட்டனவா என்று பதில் கூறினால் நலம்.

@ItsJokker - நேத்து நீட்டுக்கு எதிரா பேசிட்டு இருந்தே?
- திமுக பேர கெடுக்கத்தான்.

இன்னைக்கு நீட்டுக்கு ஆதரவா வெளிநடப்பு செஞ்சிட்டே?
- தீர்மானம் பாஸ் ஆகி திமுகவுக்கு நல்ல பேர் கிடைக்கக் கூடாதுன்னுதான்...

@Ramanujam Govindan -
கொஞ்சம் லாக்டவுனைத் தளர்த்தினாலும் தளர்த்தினாங்க அத்தனை பேரும் கல்யாணம் பண்ணிக்கறாங்க. ஏற்கனவே கல்யாணம் ஆனவன், குழந்தை இருக்கறவன்லாம் திரும்ப பத்திரிகையை
நீட்டறான்!

@Saravanakarthikeyan Chinnadurai - எந்த இரு பெண்கள் ஒரு புகைப்படத்தில் சேர்ந்திருந்தாலும் உயிர் சினேகிதிகள் போலவே முகத்தை வைத்துக் கொள்கிறார்கள். அதே ஆண்களில் இரு உயிர் நண்பர்கள் ஒரு புகைப்படத்தில் சேர்ந்திருந்தாலும் முகங்களில் ஜென்ம விரோதி போல்தான் பாவனை.

@anand17m - புதிதாக குடிக்கத் தொடங்கும் நண்பனிடமும், புதிதாக காதலிக்கத் தொடங்கும் நண்பனிடமும் அந்த போதை இறங்கும் வரை சற்று தள்ளி இருப்பது
நல்லது...

@Ram Vasanth - Pay TM, G pay, Phone Pay, Pay Zapp, lazy pay to me...
ஒருத்தருக்கு அக்கவுண்ட்ல காசே இல்லியாம். ஆனா, எங்களை எல்லாம் டவுன்லோட் பண்ணி வச்சிப்பாராம்!

@Neander Selvan - 100 மீட்டரில் மெதுவாக ஓடலாம். தோற்றால் நாம்தான் தோற்போம். ஆனால், ரிலே ரேஸில் மெதுவாக ஓடினால் நாம் தோற்பது மட்டும் இல்லாமல், நம் அணியில் உள்ள எல்லாரும் தோற்பார்கள்.

ரிலே ரேஸில் பேட்டனை (Baton) எத்தனை வேகமாகச் சென்று அடுத்த ஓட்டக்காரனுக்கு கொடுக்கிறோமோ, அத்தனைக்கு அத்தனை நம் அணி ஜெயிக்கும்.
ஹெட் ஸ்டார்ட் மிக முக்கியம்.நம் வாழ்க்கையில் நாம் மெதுவாக ஓடுவது மாதிரி தெரிந்தால், அது நமக்கு மட்டுமான பிரச்னை அல்ல; பேட்டனை வாங்கத் தயாராக இருக்கும் அடுத்த தலைமுறைக்கான பிரச்னை.

@GreeseDabba2 - எங்க வீட்டுல உள்ள டைனிங் டேபிள், டிவி ஸ்டேண்டு மாதிரி பர்னிச்சர்களை இன்னொரு வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா
வாங்கிருக்க மாட்டேன்... இதெல்லாம் எப்படி தேடிப் புடிச்சு வாங்கினேன்னே தெரியல...

@HariprabuGuru - பிரச்னை வரும்னு தெரிஞ்ச உடனே எதுவும் பேசாம வீட்டை விட்டு வெளியே போகும் கணவர்கள் அனைவரும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு ரோல் மாடல்களே!

@Ramu37954160 - கடன் வாங்காமல் வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முடியாது என்பது நடுத்தரக் குடும்பத்தின் சாபக்கேடு.

@Ram Vasanth - //உங்க கவிதைன்னா எனக்கு உசிரு. பத்து வருஷமா அதைப் படிச்சிட்டு பைத்தியமா திரியறேன்//
எழுத வந்தே ரெண்டு வருஷம்தான் ஆச்சி... எவனோ புள்ளைங்க பேர்ல ஃபேக் ஐடி ஆரம்பிச்சி நம்ம கேரக்டரை ஆழம் பாக்கிறான்!

@Kozhiyaar - தட்டில் மிச்சமாகும் குழம்புக்கு ஒரு இட்லி வைத்து, அந்த இட்லிக்கு கொஞ்சம் அதிகமாக குழம்பு ஊற்றி, அதற்கு இன்னும் ஒரு இட்லி வைத்து அதிகமாக ரெண்டு இட்லியை சாப்பிட வைப்பதில் அம்மாக்கள் கில்லாடிகள்!

@sankariofficial - ஒரு பெண்ணைக் கட்டி குடும்பம் நடத்துவது என்பது யானையைக் கட்டித் தீனி போடுவது போல... ஆண்களால் மட்டும்தான் இது முடியும்!

@Uma Kadhir - நேத்து நாய் புடிக்கிற வண்டி எங்க ஏரியாவுக்கு வந்தது. நிறைய நாய்களை வண்டியில் பிடித்துப் போட்டிருந்தார்கள்.
நான் க்ராஸ் செய்யும்போது ஒரு நாயை சுருக்குக் கம்பியில் மாட்டி இழுத்து வந்தார் ஒருவர். வண்டியில் இருந்த ஊழியர் ஒருவர் “அத அவுத்து உட்ருப்பா ஏழுமல... மடி தொங்கிட்டிருக்குது... பாரு... இங்க எங்கேயாவது குட்டி போட்ருக்கும் போலருக்கு. பிடிச்ச வரைக்கும் போதும் பாவத்த... இது போவலன்னா குட்டிங்க வண்டியில அடிபட்டுதான் சாவும்... உட்ருப்பா...’’ என்றார்.
ஏழுமலை என்பவர் பிடியை விட்டதும் நாய் ஓடிய ஓட்டம் இருக்கே...

@Gokul Prasad - இன்று பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். என்னைக் கவர்ந்தது பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்த அறிவிப்புப் பலகைதான்.
ஏதேதோ நோட்டீஸ்களுக்கு நடுவே காதல் திருமணத்திற்காகப் பதிவு செய்து காத்திருக்கும் இணையர்களின் முகங்களைப் பார்ப்பதற்கே சுவாரஸ்யமாக இருந்தது.
Special Marriage Act, 1954ன் கீழ் சட்டபூர்வமாகத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர்கள். பெரும்பாலும் மதக்கலப்புத் திருமணங்கள்.

இந்து - கிறித்தவர், இந்து - முஸ்லீம் ஜோடிகள். முன்பதிவு செய்த நாளிலிருந்து ‘three calendar months’க்குப் பிறகே திருமணம் செய்ய முடியும் போல. யாருக்காவது ஆட்சேபணை இருக்கும்பட்சத்தில் இந்தக் காலக்கெடுவுக்குள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். இணையர்களின் பெயர்கள், வயது, முழுமையான முகவரி போன்ற விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
21 வயது ஆண் 20 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்வதற்காகப் பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கிறான்.

இவர்கள் வீட்டின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்யவிருக்கிறார்கள் எனில் அவர்களது பாதுகாப்பு, வீட்டுக் கெடுபிடி, மன அழுத்தம் போன்றவற்றைக் கணக்கில் கொண்டால் மூன்று மாதங்கள் என்பது சற்று அதிகப்படியானது அல்லவா? இன்னொரு ஜோடியின் பெயர்கள் செபாஸ்டியன் - மாலினி. இந்துப் பெண், கிறித்தவ ஆண் என்பதல்ல விசேஷம். மணமகனுக்கு வயது 57, மணப்பெண்ணுக்கு வயது 50. ஒரு பலகையில் எவ்வளவு கதைகள் இருக்கின்றன!

@Despoters_ 12345 -
இடப்ஸ்: இன்னைக்கு சட்டமன்றம் போனா ஓனர் அடிப்பார்... போகலைன்னா மக்கள் அடிப்பாங்க... அவ்வ்வ்...

@Despoters_ 12345 -
இடப்ஸ்: இன்னைக்கு சட்டமன்றம் போனா ஓனர் அடிப்பார்... போகலைன்னா மக்கள் அடிப்பாங்க... அவ்வ்வ்...

@thoatta - ‘தலைவி’ படம் 50 கோடி எடுக்கலையாம்... ஆனா, தலைவிதான் 50 கோடி எடுத்துச்சாம்...

@kumarfaculty - புரட்சியாளர்கள் ‘டி’சர்ட்டுகளில் வாழ்கிறார்கள்...

@naaraju - வேலை நேரத்துல டுவிட்டர் நோண்டுறதுல்லாம் ஒரு பஞ்சாயத்துன்னு ஷோல்டர் தூக்குனா நாடு தாங்குமா..? நாம்தான் தொழில் செய்ய முடியுமா..?

@sureshkalipandi - தவறு செய்ய யாரும் பயப்படுவதில்லை; ஆனால், செய்யும் தவறு வெளியே தெரியக்கூடாது என்றே பயப்படுகிறார்கள்...

@mohanramko - நானே, பழக்கதோஷத்துல 11 மணிக்கு வீட்டை விட்டு வெளிநடப்பு செய்துகிட்டு இருக்கேன்... இவிங்க வேற...

@Shobana Narayanan - மகன்: டாடி, நீ உங்கம்மாவுக்கு முத்தம் குடு... நான் எங்கம்மாவுக்கு தந்துக்கறேன். அதான் டீல்...
கணவர்: டேய்... நான் உங்கம்மாவுக்குத்தான தர்றேன்... நீயும் எங்கம்மாவுக்குத்தான்டா தரணும்... போயி பாட்டிக்கு குடுடா...
மகன்: உங்கம்மாவுக்குத்தான தரணும்? உங்க பாட்டிக்கு ஏன் தரணும்..?

கணவர்: என் பாட்டிக்கு இல்லடா... உன் பாட்டிக்குடா...
மகன்: அதேதான்... எங்கம்மாவுக்கு இல்ல, உங்கம்மாவுக்கு... போ... போ...
டிவி: தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையாஆஆஆஆஆஆஆஆ...
மை மைண்ட் வாய்ஸ்: ஒரு முடிவுக்கு வாங்கடா சீக்கிரம்... வேலை கிடக்கு... நாளைக்கு ஆபீசு வேற...