இந்த ஃபேஸ்புக் நம்மை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கு தெரியுமா?*வீட்டுக்கு வந்த மாமனாரை ‘வாங்க சகோ’ என்று சொல்லும் அளவுக்கு...

*பையனைப் பார்த்து ‘கொஞ்சம் தண்ணீ எடுத்து வா மச்சி’ என்று சொல்லும் அளவுக்கு...

*மனைவி சாப்பாடு போடும்போது ‘போதும் தோழி’ என்று சொல்லும் அளவுக்கு...

*அலுவலகத்தில் ‘மீட்டிங் அரேஞ்ச் பண்ணு’ என்று சொல்லும் மேனேஜரிடம் ‘கெத்து ப்ரோ’ என்று சொல்லும் அளவுக்கு...

*போன் பண்ணும் அம்மாவிடம் ‘நன்றாக சாப்பிடுங்க சகோதரி’ என்று சொல்லும் அளவுக்கு...

*பக்கத்து வீட்டு லேடி நம் வீட்டிற்கு காப்பித்தூள் வாங்க வரும்போது ‘ஆசம் தோழி’ என்று சொல்லும் அளவுக்கு...

*மாமியார் வீட்டுக்கு வந்தால் ‘go back mamiyar’ என்று சொல்லும் அளவுக்கு...

*அக்கம் பக்க பெண்களைப் பார்த்தால் ‘செய்து வைத்த செப்புச் சிலை போல உள்ளீர்கள்’ என்று சொல்லும் அளவுக்கு...

*ரோட்டுல கணவனை அடிக்கும் மனைவியைப்  பார்த்து ‘பெண்ணியம் வாழ்க’ என்று சொல்லும் அளவுக்கு...

*ஞாயித்துக்கிழமை நண்பனுக்கு போன் பண்ணி ‘எங்கூட்ல கறிக்கொழம்பு’ என்று பெருமை கூறி செல்ஃபி போடும் அளவுக்கு...

*நியூஸ் பேப்பர்ல ஏதாவது நல்ல செய்தி படிச்சிட்டு கீழே ஆர்ட்டின் தேடும் அளவுக்கு...

*அடுத்த வேளை என்ன சமைக்கலாம் என்பது மாறிப் போயி ‘அடுத்த பதிவு என்ன போடலாம்’னு யோசிக்கிற அளவுக்கு...

*சீரியலில் அழும் பெண்ணைப் பார்த்து ‘ஆணாகப் பிறந்ததற்கே வேதனைப் படுகிறேன்’ என்று புலம்பும் அளவுக்கு...

*அடம் பிடிக்கும் குழந்தையிடம் ‘தமிழனாய் இருந்தால் கம்முனு இரு’ என்று  சொல்லும் அளவுக்கு...

*நானும் ஏதாவது சொல்றேன்னு அட்டென்ஷன் சீக்கிங்ல போடற தோழிக்கு ‘செப்பல் ஷாட் பதிவு தோழி’னு சொல்ற அளவுக்கு...

ஸ்ரீநிவாசன் நிதீஷ்