வலைப்பேச்சு
@drkrvcvijay - இட்லிக்கு சட்னியா பொடியான்னு தீர்மானிப்பது currentதான்! இன்னைக்கு நமக்கு பொடி தான்.
@CTR_Nirmalkumar - ‘திராவிட நாடு’ எங்கே இருக்கிறது என தெரிந்தால் கமெண்டில் பதிவுசெய்யவும்... @kalgikumar - நம் நாட்டின் தேசியகீதத்தில் இருக்குடா சேட்டு மகனே!
@HAJAMYDEENNKS - நல்லவேளை தமிழ்நாட்டில் மாண்புமிகு சுயமரியாதைக்காரர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்திருக்கிறது. இல்லாட்டி இந்நேரம் கர்நாடகாவில் மேகதாது அணையைக் கட்டி திறப்புவிழாவுக்கு எடப்பாடியே ஜீ யைக் கூட்டிட்டு வந்திருப்பார்!
@skpkaruna - ‘கொங்குநாடு பாஜகவின் நிலைப்பாடு அல்ல’ என பாஜக தலைமை அறிவித்துள்ளது. இதை வைத்து பாஜகவின் பிடியில் இருந்து நழுவும் முடிவை அதிமுக எடுத்ததை மோப்பம் பிடித்து தங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். கொங்குநாடு கேட்டு விஷம் கக்கிய சங்கிகள் மீண்டும் அதை விழுங்கி ஆக வேண்டிய அவல நிலை. பாவம்.
@Vandhana1810 - குடிகாரர்களையும்... டிரக் அடிக்ட்களையும் ஒருபோதும் லவ் செய்யாதீர்கள். கல்யாணம் செய்யாதீர்கள். கல்யாணம் செய்து அவர்களைத் திருத்தலாம் என்று ஒருபோதும் நினைத்து உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
@SaraShankar - ஏன்டா மணியா... இப்போ எவனாச்சும் இந்த பெட்ரோலு, டீசலு, ரபேலு, தடுப்பூசின்னு பேசுறானுங்களா..? அத எப்படிங்ணா பேசுவானுங்க... அதான் நாம ‘கொங்குநாடு’ன்னு ஒண்ண உருட்டி விட்ருக்கோம்ல..!
@manipmp - கிராமத்தில இளவட்டக் கல்லைத் தூக்குவதும் ஒன்று... ஹோண்டா ஆக்டிவாவைத் தூக்கி சென்டர் ஸ்டாண்ட் போடுவதும் ஒன்றே!
@karthikeyan581 - கோவையில் வணிகம் செய்வதில் பெரும்பாலோர் வடமாநிலத்தோர். அவர்களும் யாரும் கணக்கு சரியாக வைக்காமல் தமிழக அரசுக்கு வரி ஒழுங்காகக் கட்டுவதில்லை. எல்லாமே without bill. எனவே அரசு வணிகவரித்துறை மூலம் தனி அலுவலரை நியமித்து கோவையில் சரி செய்து அரசுக்கு வருமானத்தைப் பெருக்கவேண்டும். @timoviyan - 100% உண்மை. அவர்கள் கொடுக்கும் பில் estimate என்றே இருக்கும். பில் கேட்டால் உடனே பொருளின் விலை, ஒரிஜினல் விலை, இவ்வளவு வரி சேர்த்தால் இவ்வளவு... என மலைக்க வைப்பர். மக்களும் வேறு வழியில்லாமல் வாங்கிச் செல்கின்றனர்.
@naiyandi - தத்துவஞானிகள் பிறப்பதில்லை! திருமணத்திற்குப்பின் உருவாக்கப்படுகிறார்கள்!
@Thaadikkaran - கஷ்டமெல்லாம் சின்னம்மா ஆடியோ மாதிரி வந்துகிட்டே இருக்கு... சந்தோஷமெல்லாம் ‘வலிமை அப்டேட்’ மாதிரி வர்றதே இல்லை..!
@thoatta - வடக்குல சீனாக்காரன் அம்புட்டு கிலோமீட்டர் ஆக்ரமிச்சு எங்க நாடுன்னு சொல்லிக்கிட்டு இருக்கான்... நீ அதைக் கேட்க துப்பில்லாம, இங்க வந்து கொங்கு நாடுன்னு கதை விட்டுக்கிட்டு இருக்க..!
@angry_birdu - சோழர் காலத்தில் ஏது மலையாளம் என்று சில சோம்பிகள் கதறுவதை காண முடிகிறது. உங்க வாட்சப்ல வரலைங்கிறதுக்காக வரலாற்றை மாற்ற முடியுமா? மலையாளத்தின் மிகப்பழமையான ஆவணம் 849ம் ஆண்டு எழுதப்பட்ட கொல்லம் தரிசப்பள்ளி செப்பேடு. பராந்தகச் சோழன் காலம் அதற்குப் பிறகுதான்.
@chinnapiyan - மதுரையில் இருந்து 3 மணி நேரம் காரில் செல்லக்கூடிய திருநெல்வேலிக்கு 3 டோல்கேட்டில் மொத்தம் 360 ரூபாய் வசூலிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? இப்படி வசூலிக்கிற பணத்தையெல்லாம் என்னத்தைதான் செய்யுறாங்க? ஒன்றிய அரசை வியாபாரிகள் ஆண்டால் இதுதான் கதி.
@paramporul - மக்கள்: கருப்புப் பணத்த ஒழிச்சிருவேன்னு சொன்னியே? நாட்டின் சாபம்: வாய்ப்பில்லை ராஜா!
@naatupurathan - எதுக்கெடுத்தாலும் அங்கே எல்லையிலே நமது ராணுவ வீரர்கள்னு பீல் பண்றாங்களே, ராணுவ வீரர்கள் மேல அவ்ளோ பாசமா சார்..? யாரு?... இவனுங்களுக்கா... ஒழுங்கா சாப்பாடு போடமாட்டேங்கறாங்கனு சொன்னதுக்காக ஒரு ராணுவ வீரரை வேலைய விட்டு தூக்கின சல்லிப்பயலுக சார் இவனுங்க...
@PARITHITAMIL - ‘கடந்த 6 மாதத்தில் 69 முறை பெட்ரோல், டீசல் விலை ஏற்றி 4.91 லட்சம் கோடி வருவாய் ஈட்டிய ஒன்றிய அரசு’ - செய்தி. அந்த 15 லட்சத்த நம்ம வங்கி கணக்குல போடுறதுக்கு ஜி இப்படி நம்ம கிட்ட இருந்தே புடுங்குறாரோ?!
@Saravana Vel - ஓமந்தூரார் மருத்துவமனையில் இருக்கும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் அவ்வளோ அருமையாக செயல்படுது. ரிஜிஸ்டர் செய்து உள்ளே சென்றதும் சிறிது நேரம் கூட காத்திருக்கவிடாமல் ஒவ்வொரு டெஸ்ட் டுக்காக அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். ரூ.1000 முதல் ரூ.4000 வரை இருக்கிறது. காலை 8 மணி முதல் இது செயல்பட ஆரம்பிக்கிறது. ஆனால், கூட்டம் 7 மணிக்கே வந்து காத்திருக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். நல்ல திறமையான செவிலியர்கள் & டாக்டர்கள். தனியார் மருத்துவமனைகளுக்கு போட்டி போடும் அளவுக்கு சுத்தமாக இருக்கிறது.
குறைகள் என்றால் முதலில் வந்தவர் யார், கடைசியில் வந்தவர் யார் என்கிற குழப்பம் வரிசையில் போய் நிற்கும் பொழுது வருகிறது. வரவர ஒரு நோட்டில் பேர் எழுதி அதன்படி ரிஜிஸ்டர் செய்யக்கூப்பிட்டால் குழப்பம் இல்லாமல் இருக்கும்.நான்காயிரம் ரூபாய்க்கு பெண்களுக்கு செய்யப்படும் சில டெஸ்ட்கள் ஆண்களுக்கு கிடையாது. அதனால் ஆண்களுக்கான கட்டணம் குறைக்கலாம் அல்லது பெண்களுக்கு தனி ஸ்கீம் வைக்கலாம்.
தனியார் மருத்துவமனைகள் செய்யும் மாஸ்டர் ஹெல்த் செக்கப்பை ஒப்பிடும்பொழுது கட்டணம் குறைவு. 40 வயதைத் தொட்டுவிட்டதால் நானும் மனைவியும் இன்று சென்றோம். பெரியார் சிலை அருகே இருக்கும் நுழைவாயில் வழியே செல்லவேண்டும்.
@Kt__nisha294 - பாதுகாக்கப்பட வேண்டியது பணம் மட்டும் அல்ல, பாசமான உறவுகளும்தான். இரண்டும் கிடைப்பது கஷ்டம். நிலைப்பதும் கஷ்டம்!
@Prabinraj1 - காலையில ஜிம்முக்கு போலாமா, யோகா பண்ணலாமா, குங்ஃபூ பயிற்சி பண்ணலாமா, டென்னிஸ் விளையாடலாமான்னு கொயப்பமுடன் கடைசியா எதுவும் பண்ணாம... நற்காலை!
@Vanaja_twitz - ஒருத்தரோட அன்புக்காக ஏங்கி வாழ்ந்தால் அவங்க நிராகரிப்பிலேயே இறக்க வேண்டியதா இருக்கும்...
@idonashok - கிரிக்கெட் அசோசியேஷன்கள் பார்ப்பன சாதி சங்கங்களாகவும், ஓட்டப்பந்தயம் போன்றவற்றில் பார்ப்பனரல்லாதோர் பெரும்பான்மையாக இருப்பதும் எதேச்சை அல்ல. கிரிக்கெட் இவ்வளவு முக்கியத்துவம் பெறுவதற்கான காரணமும் இதில் அடங்கியுள்ளது. எனினும், நம் தம்பி தங்கைகள் ஒலிம்பிக் வெல்ல வாழ்த்துகள்.
@Saravanakarthikeyan Chinnadurai - சாதி ஆணவக் கொலை என்பது ஒருவகையில் சமூகத் தீவிரவாதம்தான். ஆக, அக்குற்றங்களை உள்நாட்டுத் தீவிரவாதச் செயலாகக் கருதி துரித வழக்கு விசாரணை நடக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தொடர்புடைய எல்லோர்க்கும் மரண தண்டனையே தரப்பட வேண்டும்.
@teakkadai1 - ரஜினி, கமல், அஜீத், விஜய் படம் பண்ணாமலேயே 20 வருஷங்களா (2002 - ‘தமிழ்’) சக்சஸ்ஃபுல் கமர்சியல் இயக்குநரா இருக்கார் ஹரி. சன் நெட்வொர்க்ல கடந்த பத்து வருஷங்கள்ல ஹரி படம் வராம இருந்த வாரங்கள் குறைவு.
@kumarfaculty - ஈஎம்ஐ கட்டி முடிக்கப்பட்ட எல்லா கார்களுமே சொகுசுக் கார்கள்தான்!
@Nathan_Thozhar - மாட்டிறைச்சி இல்லாமல் வடகிழக்கு இல்லை. இதை ஒழிக்க அசாம் பாஜக அரசாங்கம் கால்நடை பாதுகாப்பு மசோதா 2021ஐ இறக்கியிருக்கிறது. அங்கீகாரமற்ற பசு வெட்டு, பசு போக்குவரத்து, மாட்டிறைச்சி விற்பனை செய்தால் 8 வருடம் தண்டனை. இந்திய ஒன்றியத்தைப் பிரிக்க இனி போராளிகள் தேவையில்லை; சங்கிகளே போதும்.
@Kozhiyaar - இப்பெல்லாம் தொலைக்காட்சியைப் போட்டு வைத்துவிட்டு கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!
@thechanakkiyan - ஆபாசப்படம் காட்டி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - பாஜக பிரமுகர் கைது. பாஜக சித்தாந்தத்தை வீடுவீடாகக் கொண்டு செல்வேன் - அண்ணாமலை. - இரண்டும் வேறு வேறு செய்திகள்!
@prabhu65290 - அடிமட்டத் தொண்டர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிகிறது! - சசிகலா. அப்படினு யார் சொன்னா? சசிகலா: நானே ஃபோன் பண்ணி கேட்டு தெரிஞ்சுகிட்டேன்...
@Ramanujam Govindan - அவசர வேலையாகக் காருக்கு காற்றடிக்கப் போனால் அங்கு ட்ராக்டர் டயரைப் பஞ்சர் பார்த்துக் கொண்டிருப்பார் மெக்கானிக்! அதுகூடப் பரவாயில்லை.பொறுத்துக்கலாம். ஆனால், ட்ராக்டர் டயரைக் கழற்றியவாறே ‘ஒரு ரெண்டு நிமிஷம் சார்! இதை முடிச்சுட்டு வந்திடறேன்!’ என்பார்.
@Asif Meeran - ஆயிரம் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தாலும் ‘ஹோஸ் ரீல் ஸ்டிக்கர்’ வரைந்த ஓவியனை சிலாகிக்கும் கலையார்வப் பெருந்தன்மை மகளிரல்லாது வேறு யார்க்கு வாய்க்கும்? எவம்லே பெண்களுக்குக் கலை ரசனை இல்லைன்னு சொன்னது? மகளிர் கலைரசனை போற்றுதும்!
@Deepa Janakiraman - இந்த மாடுலர் கிச்சன் நம்ம இந்தியாவுக்கு சரிவராதுன்னு தோணுது. இன்னிக்கு காலையில சப்பாத்தி பண்ணலாம்னு கட்டையத் தேடறேன்... அது கீழ உள்ள அலமாரிக்கு எப்படியோ போயிருக்கு. அதைத் திறக்கவும் வரல. அந்த அலமாரி கதவு எங்கேயோ இடிச்சிட்டு நிக்குது. நேரம் போயிட்டே இருக்கு. ஆன்லைன் கிளாஸ்... ஆபீஸ் போகணும்... போன் வேற வந்துட்டே இருக்கு. எல்லார்க்கும் பசி. ஆனா, இந்த சப்பாத்தி கட்டையை எடுக்க முடியல. கடைசியில பிளாஸ்க் வச்சு மாவை சப்பாத்தியாக்கினேன்.
எதுக்கு சொல்ல வரேன்னா... சமையலறையில வசதி பெருகிடுச்சுன்னு மாடுலர் கிச்சனைக் காட்டறாங்க. ஆனா, பெரிய தொல்லை இந்த நவீன சமையல் அறையினால. நாம கிச்சன்களை ஒழிக்கறதுக்கு முன்னாடி இந்த மாடுலர் கிச்சனை ஒழிச்சாகணும்.
|