நெகிழ வைக்கும் இமான்!



நிறைய புதுமுகப் பாடகர்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்யும் இமான் ஏற்கெனவே மாற்றுத் திறனாளிகளான வைக்கம் விஜயலட்சுமியையும் நொச்சிப்பட்டி திருமூர்த்தியையும் தமிழ்த்திரையுலகுக்கு பின்னணிப் பாடகர்களாக அறிமுகம் செய்து அசத்தினார்.

இப்போது இன்னொரு காரியத்தை செய்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.பிரபுதேவாவின் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் இன்னமும் பெயரிடப்படாத புதிய தமிழ்ப் படத்திற்கு இமான் இசை அமைக்கிறார். யுகபாரதியின் வரிகளில் பாடல்கள் இடம் பெறவிருக்கின்றன.இந்தப் படத்தில் குழந்தைகள் உற்சாகமாகப் பாடும் பாடல் ஒன்றிற்காக அறிமுகப்படுத்தும் ஆதித்யா சுரேஷ் மற்றும் சஹானா என்ற இரண்டு குழந்தைப் பாடகர்களும் சிறப்பு வாய்ந்தவர்கள்.

யெஸ். இம்முறை இமான் அறிமுகம் செய்திருக்கும் குழந்தை சஹானாவுக்கு பார்க்கும் திறன் இல்லை. அதைப் போலவே இடுப்பிற்குக் கீழே செயல்பாடு இல்லாத, எப்போதும் பெற்றோர்கள் தூக்கிச் சுமக்கும் நிலையில் இருக்கும் நிலையில் இருப்பவர் ஆதித்யா சுரேஷ்.இருவரின் பாடும் திறமையை உணர்ந்து அவர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார் இமான்.

காம்ஸ் பாப்பா