இசைப்புயலின் ஹை-டெக் மாஸ்க்!



கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்கே ஏ.ஆர். ரஹ்மானும், அவரது மகனும் அணிந்திருந்த மாஸ்க்தான். இதை மாஸ்க் என்று சொல்வதைவிட, ஹை-டெக் கேட்ஜெட் என்று சொன்னால் சரியாக இருக்கும். ப்யூரிகேர் வியரபிள் ஏர் ப்யூரிஃபையர் (PuriCare Wearable Air Purifier) என்பது இதன் பெயர்.
காற்று மாசடைந்த பகுதிகளில் பயன்படுத்தப்படும் ஏர் ப்யூரிஃபையரைப் போல செயல்படுகிறது இந்த கேட்ஜெட். காற்றை வடிகட்டுவதற்காக H13, HEPA என்று இரண்டு வடிகட்டிகள் உள்ளன. எந்த  சிரமமும் இல்லாமல் சுவாசிக்க ஒரு குட்டி ஃபேன் உள்ளது. எப்படி சுவாசிக்கிறோம் என்பதை கண்காணிக்க ஒரு ரெஸ்பிரேட்டரி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் கிடைக்கும் தகவல்களை வைத்து அந்த குட்டி ஃபேன் செயல்படும்.சார்ஜ் செய்து கொள்ளலாம். அதற்காக  820 mAh திறன்கொண்ட பேட்டரியைக் கொடுத்திருக்கிறார்கள். இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால், எட்டு மணி நேரம் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம். இதன் விலை 249 அமெரிக்க டாலர்கள். அதாவது சுமார் ரூ.18 ஆயிரம்!

திலீபன் புகழ்