சில்வண்டு சாக்லேட்!



அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள ஒரு சாக்லேட் கடையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. காரணம், அங்கு மட்டுமே கிடைக்கும் சில்வண்டு சாக்லேட்.

இந்த சாக்லேட்டை செய்வதற்கான செயல்முறைகள்தான் ரொம்பவே ஆச்சர்யம்.
ஆம்; சில்வண்டு சாக்லேட் தயாரிப்பதற்கான முதல் வேலையாக கடை முதலாளியான சாராவும், ஊழியர்களும் மேரிலேண்டில் இருக்கும் காடுகளில் அலைந்து திரிந்து சில்வண்டுகளைச் சேகரித்து வருவார்கள். அடுத்து உயிருடன் உள்ள சில்வணடு களை ஒரு காகிதப் பைக்குள் அடைத்து, குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்துவிடுகிறார்கள். அவை இறந்தபிறகு கொதிக்கும் நீரில் போட்டு சுத்தம் செய்வார்கள். அப்போது 20% சில்வண்டுகள் வீணாகிவிடும்.

சுத்தம் செய்யப்பட்ட சில்வண்டுகளை வறுப்பது அடுத்த செயல்முறை. நன்கு வறுக்கப்பட்ட சில்வண்டுகளின் மீது மசாலா மற்றும் சீசனிங்கைத் தூவுவார்கள். இந்தச் செயல்
முறையிலேயே சில்வண்டுகள் சாப்பிடுவதற்கு ஏற்ப தயாராகிவிடும். இருந்தாலும் அதன் மேல் சாக்லேட்டை தங்கம் போல பூசுவார்கள். சில நிமிடங்களில் சில்வண்டுகள் சாக்லேட் துண்டுகளைப் போல உருமாறிவிடும். இதன் சுவை அலாதி யாக இருப்பதால் ஆன்லைனிலும் ஆர்டர்கள் குவிகின்றன.

த.சக்திவேல்