புலிட்சர் விருது பெறும் முதல் தமிழர்..?
சென்ற வருடம் காஷ்மீர் ஊரடங்கை படம் பிடித்ததற்காக Associated press தளத்தை சார்ந்த மூன்று இந்தியர்கள் புகைப்படத்திற்கான புலிட்சர் பரிசு பெற்றது நினைவிருக்கலாம்.
இந்த வருடத்திற்கான international reporting / சர்வதேச செய்தியறிக்கைக்கான புலிட்சர் பரிசு சீன அரசாங்கம் உய்கர் முஸ்லீம்களை தடுப்புக் காவலில் வைத்திருப்பதை புலனாய்ந்து எழுதியதற்காக buzzfeed தளத்தைச் சார்ந்த மூன்று பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.  இதில் முதலாவதாக உள்ள பெயர் மேகா ராஜகோபாலன்.இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர். அவர் தமிழும், மாண்டரின் சீனமும் பேசுவார் என்று புலிட்சர் தளம் தெரிவிக்கிறது. அவ்வாறாயின் தமிழ் பேசும் ஒருவர் புலிட்சர் வாங்குவது இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும்.வாழ்த்துக்கள்.
காம்ஸ் பாப்பா
|