ஒரு குட்டிக் கதை!
அக்மார்க் மசாலா என்று முத்திரை குத்தப்பட்ட தெலுங்கு சினிமாத்துறையில் இருந்து தரமான, கலைஅம்சம் கொண்ட படங்களும் வரத் துவங்கியிருக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணம், ‘ஏக் மினி கதா’. ‘அமேசான் ப்ரைமி’ல் பார்க்கலாம்.நடுத்தரக் குடும்பத்து இளைஞன் சந்தோஷ். சிவில் எஞ்சினியராக இருக்கிறான். தன்னுடைய உடலில் இருக்கும் ரகசிய பிரச்னையால் அவதிப்படுகிறான். தன்னால் தாம்பத்ய உறவில் சரியாக ஈடுபட முடியாது என்று நம்புகிறான்.

இச்சூழலில் அவனுக்கு ஓர் அழகான பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. அந்தப் பெண்ணை அவனுக்கு ரொம்பவே பிடித்துப் போகிறது. அதனால் தன் உடல் ரீதியான பிரச்னையை சரிசெய்ய பலவழிகளிலும் முயற்சி செய்கிறான்.
ஆனால், எதுவும் நடப்பதில்லை. தவிர, தன்னுடைய பிரச்னை வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக முதலிரவைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கிறான். சந்தோஷின் பிரச்னை என்ன..? பிரச்னையை சரி செய்ய அவன் என்னவெல்லாம் செய்கிறான்..? உண்மையில் அது பிரச்னையா... என்பதை நகைச்சுவையாகச் சொல்லிச் செல்கிறது திரைக்கதை. கதாபாத்திரங்களின் தேர்வு அருமை. இயக்குநர் கார்த்திக் ரபோலுக்கு இது முதல் படம்.
தொகுப்பு: த.சக்திவேல்
|