கொரோனாவில் பூத்த மலர்கள்!
 ராபர்ட்ஆஷா பட் கன்னட ஹீரோ தர்ஷனின் ஜோடியாக அறிமுகமானவர் ஆஷா பட். கர்நாடகாவிலுள்ள பத்ராவாடியில் பிறந்தவர். எலக்ட்ரானிக் என்ஜினியரிங் படித்தவர். கல்லூரி நாட்களில் மாடலிங் செய்ய ஆரம்பித்து அழகிப் போட்டிகளில் பங்கேற்று பியூட்டி குயின், சூப்பர்நேஷனல் பட்டங்களை எல்லாம் வென்றிருக்கிறார்.மும்பையில் தற்சமயம் வசிக்கும் ஆஷா பட், இந்தியில் ‘ஜங்லி’யில் முகம் காட்டிவிட்டு கன்னட திரையுலகுக்கு வந்திருப்பவர் தன் பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். ஆஷாவின் அக்கா, குழந்தைகள் நல மருத்துவர் என்பது போனஸ் தகவல்.
 உப்பெணா கீர்த்தி ஷெட்டி
தெலுங்கின் சின்ன பட்ஜெட் படமான ‘உப்பெணா’ அங்கே நூறு கோடி கலெக்ஷனை அள்ளியதில், திரும்பிப் பார்க்க வைத்த புதுமுகம் கீர்த்தி ஷெட்டி. ஹோம்லி ஸ்மைலில் கோலிவுட் வரை கிறுகிறுக்க வைத்திருப்பவரின் பூர்வீகம் கர்நாடகாவிலுள்ள மங்களூரு. ஆனால், வளர்ந்ததெல்லாம் மும்பையில். சைக்காலஜி படித்துவிட்டு, டாக்டர் ஆக நினைத்தவர் ஆக்டர் ஆனது தனிக்கதை. இதற்கிடையே இந்தியில் ‘சூப்பர் 30’ படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் மின்னியிருக்கிறார்.
 கல்லூரி நாட்களில் மாடலிங் செய்ய, அங்கிருந்து சினிமா ஆஃபர். ‘உப்பெணா’ ஆடிஷனில் செலக்ட் ஆனார். ஒரே ஒரு படத்தின் மூலம் இப்போது தெலுங்கில் சரளமாக மாட்டலாடவும் செய்கிறார். இப்போது நானியின் ‘ஷ்யாம் சிங்கா ராய்’, சுதீர் பாபுவின் ‘ஆ அம்மாயி குறிஞ்சி மீரு செப்பண்டி’ தவிர நம்மூர் லிங்குசாமி அங்கே இயக்கி வரும் படத்திலும் பளபளக்கிறார். கொரோனா டைம் ஆல்ரைட் ஆனதும் இங்கேயும் வருவார் கீர்த்தி! நம்பலாம்.
 ஹிட்- த ஃபர்ஸ்ட் கேஸ் ருஹானி சர்மா
நானி தயாரிப்பில் விஸ்வக் சென் நடித்த ‘ஹிட்’டில் அறிமுகமானவர் ருஹானி சர்மா. தெலுங்கில் இதுதான் முதல் படம் என்றாலும் இதர இண்டஸ்ட்ரீயிலும் சிறகடித்தவர். இமாச்சல் பிரதேசத்தில் பிறந்த ருஹானி, மாடலிங்கில் இருந்து சினிமா என்ட்ரி ஆனவர். ருஹானியை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்த பெருமை கோலிவுட்டிற்கே போய்ச்சேரும். பரத் நடித்த ‘கடைசி பென்ச் கார்த்தி’யில் அறிமுகமானவர், அதன்பிறகு மலையாளம் போனார். தெலுங்கில் சுஷாந்தின் ஜோடியாக ‘சி லா சவ்’வில் ருஹானி அறிமுகமானாலும், நானி படம்தான் ருஹானிக்கு முதல் படம் போல கெத்து காட்டியிருக்கிறது. அங்கே ‘டர்ட்டி ஹரி’யிலும் பளபளத்தவர் இந்திக்கும் போனார். ‘ஆக்ரா’வில் ஆனந்தமானார். இப்போது டோலிவுட்டில் கைவசம் இரண்டு படங்களில் கிடுகிடுக்கிறார்.
ரெட் மாளவிகா ஷர்மா
மகிழ் திருமேனியின் ‘தடம்’ படத்தின் டோலிவுட் ரீமேக்கான ‘ரெட்’, லாக்டவுன் சீஸனிலும் பாக்ஸ் ஆபீசை கலெக்ஷனில் சற்றே அதிர வைத்தது. அப்படத்தில் கவனம் ஈர்த்தவர்தான் இந்த மாளவிகா ஷர்மா. பூர்வீகம் மும்பை. அங்கே சட்டக்கல்லூரியில் கிரிமினாலஜி படித்துக் கொண்டிருந்தவருக்கு மாடலிங் ஆசை எட்டிப் பார்க்க... கொத்து கொத்தாக விளம்பரப் பட வாய்ப்புகளும் குவிந்துவிட்டன.
தன் தாத்தாவைப் போல பெரிய வழக்கறிஞராக பெயர் வாங்க நினைத்தவருக்கு, ஸ்வீட் ஷாக். ரவிதேஜாவின் ‘நிலா டிக்கெட்’டில் அறிமுகமானார். பிறகு படிப்பில் கவனம் செலுத்தியவருக்கு ‘ரெட்’தான் முதல் பட ரேஞ்ஜில் குட் நேமை குவித்திருக்கிறது. குளுகுளு போட்டோஷூட்களைத் தெறிக்கவிடும் மாளவிகா, ஆன்மிகத்திலும் மனதை லயிக்க விடுகிறார். பொண்ணு சிவபக்தை!
ஸ்கைலாக் அர்த்தனா பின்னு
சென்ற ஆண்டு வெளியான மம்மூட்டியின் ‘ஸ்கை லாக்’கில் பூங்குழலி வேல்முருகனாக மினுமினுத்தவர் அர்த்தனா பின்னு. இந்தப் பெயரை எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே என்கிறீர்களா? உங்கள் யூகம் சரிதான். தமிழில் ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘செம’, ‘தொண்டன்’ என பல படங்களில் புன்னகைத்தவர்.
திருவனந்தபுரத்தில் பிறந்த அர்த்தனா, மாஸ் கம்யூனிகேஷன் முடித்திருக்கிறார். தெலுங்கில் அமர்க்களமாக ‘சீதம்மா அந்தலு ராமையா சிற்றாலு’வில் அறிமுகமானார். அதன்பின் மலையாளத்தில் ‘முதுகவ்வு’வில் அறிமுகமானாலும், மம்மூட்டியின் படம்தான் அர்த்தனாவுக்கு ஐடென்டிடி கார்டு. மீண்டும் கோலிவுட்டில் சிறகடிக்க விரும்புகிறார் அர்த்தனா.
ஃப்ரெஞ்ச் பிரியாணி திஷா மதன்
கன்னடத்தில் அஸ்வினி புனித் ராஜ்குமார் தயாரிப்பில் தனிஷ் சைத் நடித்த ‘ஃப்ரெஞ்ச் பிரியாணி’யில் அறிமுகமானவர் திஷா மதன். சமந்தாவைப் போல, அசத்தும் பொண்ணு. யெஸ். திஷாவுக்கு திருமணமாகி, ஒரு குழந்தையும் உண்டு. சோஷியல் மீடியாக்களில் டிக்டாக்கில் செமையாக அசத்தும் திஷா, இந்த பிரியாணி டீம் கண்களில் சிக்கிவிட, உடனே அறிமுகம் செய்து விட்டார்கள்.
படத்தில் நியூஸ் ரிப்போர்ட்டராக கலக்கியுள்ளார். ஆனால், டிக்டாக்கிற்கு முன்னரே சின்னத்திரையில் டான்ஸிங் ஸ்டார் பட்டம் குவித்தவர். கன்னடப் பட அறிமுகத்திற்குப் பின்னர், வெப் சீரிஸிலும் பளபளக்கிறவர் இப்போது தன் செல்லக்குழந்தையுடன் இன்ஸ்டாவில் அசத்தல் போட்டோஷூட்களையும் அள்ளி வீசி ஆனந்தமாகிறார். கன்னடத்தில் அஸ்வினி புனித் ராஜ் குமார் தயாரிப்பில் தனிஷ் சைத் நடித்த ‘ஃப்ரெஞ்ச் பிரியாணி’யில் அறிமுகமானவர் திஷா மதன். சமந்தாவைப் போல, அசத்தும் பொண்ணு. யெஸ். திஷாவுக்கு திருமணமாகி, ஒரு குழந்தையும் உண்டு.
சோஷியல் மீடியாக்களில் டிக்டாக்கில் செமையாக அசத்தும் திஷா, இந்த பிரியாணி டீம் கண்களில் சிக்கிவிட, உடனே அறிமுகம் செய்து விட்டார்கள். படத்தில் நியூஸ் ரிப்போர்ட்டராக கலக்கியுள்ளார். ஆனால், டிக்டாக்கிற்கு முன்னரே சின்னத்திரையில் டான்ஸிங் ஸ்டார் பட்டம் குவித்தவர். கன்னடப் பட அறிமுகத்திற்குப் பின்னர், வெப்சீரிஸிலும் பளபளக்கிறவர் இப்போது தன் செல்லக்குழந்தையுடன் இன்ஸ்டாவில் அசத்தல் போட்டோஷூட்களையும் அள்ளி வீசி ஆனந்தமாகிறார்.
த கிரேட் இந்தியன் கிச்சன் நிமிஷா சஜயன்
என்னாது... நிமிஷா மலையாளப் படமான ‘த கிரேட் இந்தியன்’லதான் அறிமுகமானாங்களா... என ஷாக் ஆக வேண்டாம். இந்தப் படத்திற்கு முன் நிமிஷா அரை டஜன் படங்களில் சிறகடித்தாலும் கூட, நிமிஷாவின் கேரியர் கிராஃப் டாப் கியரில் எகிறியது இந்த ஒரு படத்தால்தான். இதன்பின் ‘ஒன்’, ‘நயட்டு’, ‘துரம்ஹம்’, மாலிக்’ என வரிசையாக மலையாளப் படங்களில் நடித்தும், முடித்தும் கொடுத்திருக்கிறார்.
நிமிஷா மலையாளி என்றாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். டிகிரியை அங்கேதான் முடித்தார். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், மார்ஷியல் ஆர்ட்ஸிலும் பொண்ணு எக்ஸ்பர்ட். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே, டேக்வாண்டோ தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார். நிமிஷாவின் அப்பாவுக்கு இண்டஸ்ட்ரியில் டச் இருந்ததால்... பஹத் பாசில் படம் கிடைத்தது. ஆனால் ‘இந்தியன் கிச்சன்’ பான் இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டதில் நிமிஷா ஹேப்பியோ ஹேப்பி.
தொகுப்பு: கண்மணி
|