வலைப்பேச்சு@NithyaShre1 - இன்றைய அதிமுக வேட்பாளர்; நாளைய பாஜக எம்எல்ஏ. பாத்து சூதானமா இருங்க மக்களே!

@prabhu65290 - அரசியலில் எப்படி நடக்கவேண்டும் என ஜெயலலிதா பயிற்சி அளித்துள்ளார். - முதல்வர் பழனிசாமி.
எடா கோபி, அம்மா முன்னாடி இவங்க யாரும் நடந்து நான் கண்டில்லா... நீ நோக்கியோ?

@MinnaleRajesh - மக்களே ஆன்லைன்ல ஏதாச்சும் விக்கணும்னு விளம்பரம் குடுத்திருந்தா உஷார். கியூஆர் கோடு ஸ்கேன் பண்ணச் சொல்லி பணம் அனுப்புறேன்னு நம்ம அக்கவுண்ட்ல இருக்க பணத்த ஆட்டைய போடறாங்க!

@SSivakkrishnan - ஊராடா இது? ஆன்மிகவாதி கூட பெரியாரிஸ்ட்டா இருக்கானுங்க... இப்படி இருந்தா எப்படி தாமரை மலரும்?!

@kumarfaculty - தண்ணீர் லாரிகளை உருவாக்கியது மணல் லாரிகளே...

@teakkadai1 - இந்தத் தேர்தலில் இதுவரை கவனித்த மாற்றங்கள்:

1. சுவர் விளம்பரம், சுவரொட்டி வகையறா குறைந்துள்ளன.

2. இணையவழி பிரசாரம் அதிகரித்துள்ளது. தொலைக்காட்சி வழியும்.

3. வாக்குச்சாவடிக்கு மக்களை (நகர்ப்புறங்களில்) அழைத்து வர பெரிய மெனக்கெடல் தேவையில்லை என்னும் அளவுக்கு எல்லோரிடமும் ஏதோ ஒரு வாகனம் இருக்கிறது. ஒரு பூத்துக்கு 10 கட்சி உறுப்பினர் இருந்தாலே போதும் என்னும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துள்ளது.

4. சென்னை, கோவை போன்ற நகரங்களில் இளம்பெண்கள் தெருவில் இறங்கி வாக்கு சேகரிக்கிறார்கள். இது அதிமுகவில் குறைவு. கூட்டத்தில் ஒன்றிரண்டு பெண்களை அழைத்துச் செல்கிறார்கள். அவ்வளவுதான்.

5. வாக்காளர்களுக்கு பணம் தரத்தேவையில்லை என்ற பட்சத்தில் முன்னிருந்தே தெளிவாக டிஜிட்டல் கன்டென்ட் மற்றும் அதை பரப்பும் குழுக்கள் உருவாக்கியிருந்தால் தேர்தல் கமிஷனின் தமிழ்நாட்டின் உச்சபட்ச செலவு அளவான ₹28 லட்சத்தில் முடிக்கலாம்.

@BabuSrinivasa10 - தொலைக்காட்சி களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் திமுக விளம்பரங்களில் ஆடம்பரம் இல்லை. அவர்களைப் போல் அடுத்த கட்சியை ஏளனம் செய்யவில்லை. மக்களுக்கு எந்த விஷயம் போய்ச் சேரவேண்டுமோ அது சரியாகப் போய்ச் சேர்ந்திருக்கிறது. உதாரணமாக, பெண்களுக்கு சுமையாக மாறியிருக்கும்கேஸ் சிலிண்டர் விலை.

@idonashok - கமலின் மநீமவுக்கு அதிமுக பரவாயில்லை. அதிமுகவாவது திமுக தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்தது. கமல் பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார்.

@mekalapugazh - ‘இலவசம் எனக்குத் தேவையில்லை...’ என்று சொல்லும் உரிமை அனைவருக்கும் உண்டு. ‘இலவசம் எவருக்கும் தேவையில்லை...’ எனச்சொல்லும் உரிமை எவருக்குமில்லை...

@imcomrade - அரசு மருத்துவ மனையை குறை சொல்பவன் வெறும் ஷங்கர் படங்களில் மருத்துவமனையைப் பார்த்தவனாகமட்டுமே இருப்பான். கிராமங்களில் Diabetesக்கு note போட்டு மாத்திரை வாங்கிச் சாப்பிடும் வயதானவர்களைக் கேளுங்கள்,  அரசு மருத்துவமனையின் மகிமையை.

@rajiv_dmk - ஒரு ரூபாய் வருமானமாம்... நூறு கோடியில் திருமணமாம்... - A1.

ஆயிரம் ரூபாய் வருமானமாம்... 108 ஆடு வெட்டி காதுகுத்தாம்... - A2வின் உறவினர்.
அதே ஊழல், அதே சர்வாதிகாரம்...
A1 - மக்கள் காசு!
A2 உறவினர் - பொண்டாட்டி தாலிய அடகு வச்சு போஸ்டர் ஒட்டும்
கட்சிக்கார தம்பிகள் காசு!

@kumarfaculty - சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்திற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் - செய்தி.
எத்தனையோ வெடிகுண்டை செயலிழக்க வைத்தவருக்கே வெடிகுண்டு மிரட்டலா?

@Raajavijeyan - L‘ear’n.... கற்றுக்கொள்ள விரும்பினால் முதலில் கேட்கப் பழக வேண்டும்...

@drloguortho1 - கோழிகளுக்குத் தீனி போடுவதே அது நமக்குத் தீனி ஆவதற்குத்தான்!

@thecommonman__ - 3 தொகுதிய திருப்பிக் கொடுத்துட்டாரு, ஒரு வேட்பாளர் மனு ரிஜக்ட் ஆகிடுச்சு, ஒரு வேட்பாளர் கடைசி நேரத்துல வாபஸ் வாங்கிட்டாரு... பாவம் சரத்!

@balebalu - வங்கிக் கணக்கில் எப்படியும் நம்ம ஆதார் எண் இருக்கு. அதை பான் கார்டுடன் அரசே இணைத்து விடலாமே? எதற்கு ஒவ்வொரு முறையும் நம்மளை இணைக்க சொல்றாங்க?

@mohanramko - சாட்சிக்காரன் கால்ல விழறதை விட சண்டைக்காரன் கால்ல விழலாம் மகனே...இப்ப என்ன, பெட்ரோல் விலையை குறைக்கச் சொல்லி அதானிகிட்டயே கேட்கணும், அதானே...

@kavimangal - லாக்டவுன் நாட்களில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைத் துரத்திய ட்ரோன் கேமரா, ஓட்டுக்கு பணம்
கொடுக்க வரும் அரசியல்வாதிகளைத்துரத்துமா?

@sultan_Twitz - அமைச்சரவையில் பாஜக இடம்பெறுவது குறித்து பின்னர் ஆலோசிக்கப்படும் - சி.டி.ரவி.டேய்! உங்களுக்கு பொங்கலே கிடையாதேடா..?!

@manuvirothi - நடந்து போய்த்தான் பதவி ஏற்றீர்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், பதவி பெற்றிட எப்படி போனீர்கள் என்பதற்கு செய்முறை விளக்கம் தேவை.

@Vinayaga Murugan - சீமானோட பேச்சைக் கேட்டேன். அவர் முதலமைச்சராக வந்தால் பிளாஸ்டிக் நாற்காலிகளை எல்லாம் ஒழித்துவிட்டு மூங்கில் நாற்காலிகள் கொண்டு வருவாராம். அதுபோல வீடு பெருக்கும் மாப்களை எல்லாம் ஒழித்துவிட்டு தென்னங்குச்சி துடைப்பம் கொண்டு வருவாராம்.
அடுத்து சொன்னதுதான் ஹைலைட். நட்சத்திர விடுதியில் உள்ள அலுமினிய, எவர்சில்வர் பாத்திரங்களை எல்லாம் ஒழித்துவிட்டு இயற்கையான மண்பானை, சட்டிகளை கொண்டுவருவாராம்.என்னடா இது? குறளிவித்தையா இருக்கேன்னு கேட்டால் அதற்கு பெயர் தற்சார்பு பொருளாதாரமாம்.
நல்லவேளை ஜட்டியை ஒழித்துவிட்டு லங்கோடுதான் கட்டணும்னு சொல்லலை.

@shivaas_twitz - மோடியின் படத்தைப் போட்டு தேர்தல் பிரசார போஸ்டர் அச்சடித்த பாஜக நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்...
இப்படி ஒரு செய்தி வந்தா கூட ஆச்சர்யமில்லை!

@sultan_Twitz - அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி தமிழகத்தை தலைநிமிர்த்தும் - பொன்.ராதாகிருஷ்ணன்.
அப்போ 10 வருசமா தமிழகம் வெற்றி நடை போடல..?!

@gips_twitz - 50 ஆண்டுகளாக நீங்கள் செய்த பாவங்களுக்கு எங்களுக்கு ஓட்டு போட்டு பரிகாரம் தேடிக்கொள்ளுங்கள் - சீமான்
என்னடா இது... ஓட்டு போடலைனா ரத்தம் கக்கி சாவீங்க ரேஞ்சுக்கு வந்துட்டீங்க!

@radhavenkat2 - என்னவாகப் போற என சிறுமியிடம் கேட்டதும் சட்டென, ‘நல்லாப் படிச்சி நல்ல அம்மாவாக இருக்கப் போறேன்’ என்றாள்.
‘நல்ல அம்மாவா இருக்க படிக்க வேண்டியதில்லையே’ என்றதும், ‘என் அம்மா அப்படித்தான்’ என்றபடி ஓடிப்போனாள்.
எதையோ தொலைத்தது போன்றோ, எதையோ கற்றது போன்றோ மனம் தடுமாறியது.

@ItsJokker - நான் பாத்து வேட்பாளரா நிறுத்துனேன் சாமி. இப்போ என்னடான்னா நா பிரசாரத்துக்கு வந்தா ஓட்டு விழாதுன்னு என்கிட்டயே சொல்றான் இவன்..!

@RahimGazzali - நடிகர் கார்த்திக்கின் அ.இ.நா.ம.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘தூங்கு பவர்களை எந்தக்காரணம் கொண்டும் எழுப்பக்கூடாது. மீறி எழுப்பினால் எழுப்பியவருக்கு ஒரு வருடம் சிறை என்று சட்டத் திருத்தம் கொண்டுவர வலியுறுத்துவோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தீபாவும் வரவேற்றுள்ளார்!

@GreeseDabba2 - ஐயா, பெட்ரோலுக்கு பதிலா கோமியத்துல ஓடற வண்டி கண்டுபிடிப்போம்னு பத்தரத்துல சொல்ல மறந்துட்டீங்க...

@shivaas_twitz - லேடீஸ் அவங்க பிறந்த ஊர் பெருமை பேசுறதெல்லாம் ஆயிரம் ‘வெற்றிநடை போடும் தமிழகமே’ விளம்பரத்துக்கு சமம்!

@Abdul Hameed Sheik Mohamed - இட ஒதுக்கீடு கொடுப்பதா இல்லையா என்பதை பொருளாதார அளவுகோல்படி முடிவு செய்யவேண்டும் என்று கமல் சொல்வது இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அதே உயர்சாதி லாபியின் வாதம்தான். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும்கூட அதே கருத்துதான்.

தமிழ்நாட்டில் இதை முதலில் கொண்டுவந்தது, எந்த எம்ஜிஆரின் ஆட்சியை கொண்டு வருவேன் என கமல் சொல்கிறாரோ அதே எம்.ஜிஆர்தான்.
கலைஞரின் கடும் எதிர்ப்பால் பொருளாதார அளவுகோல் முறியடிக்கப்பட்டது. மண்டல் கமிஷனின் ஆதாரமே இட ஒதுக்கீட்டிற்கு அடிப்படையாக ‘கல்வி மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய நிலையே’ கொள்ளப்படவேண்டும் என்பதுதான்.

சமூக ரீதியாக பின்தங்கிய நிலை என்பது பிறப்பின் அடிப்படையில் சாதிய ரீதியான ஒடுக்கப்பட்ட நிலையைக் குறிக்கிறது. ஒருவரது பொருளாதார அந்தஸ்து உயர்ந்தாலும் அவரது சாதிய அந்தஸ்து உயர அனுமதிக்கப்படுவதில்லை.இதெல்லாம் கமலுக்குப் புரியாது. ஏனெனில் கமல் பேசுவது எல்லாம் அவரது பொலிடிக்கல் ஸ்பான்ஸர்களின் கருத்தே தவிர அவரது கருத்து அல்ல. ஆக்‌ஷன்தான் அவருடையது. வசனம் வேறொருவருடையது.

@RahimGazzali - மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரித்த வானதி சீனிவாசன் - செய்தி. பெட்ரோல், டீசல் விலை உயர்வை நீங்களே கலாய்ச்சா எப்படி?!

@mohanramko - நாம் யாருக்கு என்ன செய்தோம்! ஓட்டு கேட்கவே போக முடியாதபடி ஏன் செய்கிறார்கள்?
நாம் யாருக்கும் எதுவும் செய்யவில்லை மன்னா! அதான் காரணம்...

@swaravaithee - அது அவரது சொந்தக் கருத்து. அதற்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை - தமிழிசை காலத்து பாஜக.
மோடி ஒரு தனிநபர். அவருக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை - எல்.முருகன் காலத்து பாஜக.

@GreeseDabba2 - அதிமுக ஆட்சியில் தொண்டாமுத்தூர் தொகுதி அடைந்துள்ள வளர்ச்சிகளை பட்டியலிட்டால் நேரம் போதாது
- ஜி.கே.வாசன்.

பரவால்ல சொல்லு... எங்களுக்கு பஸ் சாயங்காலம் ஆறு மணிக்குதான்..!

@Lakshmanasamy Odiyen Rangasamy - திமுக பிரசார உத்திகளை வகுத்தவர்கள் ஸ்டாலினை மட்டுமே முன்னிறுத்தியது ஒரு Clever move...
ஸ்டாலின்தான் திமுக, திமுகதான் ஸ்டாலின் என்று தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்டதன் விளைவு -
1 கட்சியின் பழைய மைனஸ் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

2. ஸ்டாலினை ஒரு பிரம்மாண்டமான தலைவராக பிரகாசிக்க வைத்திருக்கிறது.
3. ஸ்டாலினா, மற்றவர்களா என்ற ஒப்பீட்டுப் போட்டியில் ஸ்டாலினை 10 சதவீதம் முந்தியிருக்கச் செய்தது மட்டுமல்லாமல், அந்த பிம்பம் கட்சியையும் 10 சதவீதம் முன்னோக்கி இழுத்துப்போயிருக்கிறது.
4. திமுகவா, அதிமுகவா என்ற இருமையைத் தவிர்த்து, எம்ஜியார், ஜெய
லலிதா போன்ற பிம்பங்களை போட்டியில் மங்கலாக மாற்றியிருக்கிறது.
இது பக்காவான Clinical approach.