Data Corner



*146 டன் கொரோனா மருத்துவக் கழிவுகள் நாடு முழுவதும் தினமும் உருவாவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.

*30 மாசடைந்த நகரங்களில்(உலகில்) 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.

*6ல் ஒருவர் அல்லது 20.14 கோடி இந்தியர்கள் எஸ்சிகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 4ல் 3 பேர் கிராமப்புறங்களில் வாழ்வதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

*50% குழந்தைகளும், 55% பெண்களும் தமிழகத்தில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.  

*61.7% மக்கள்தான் தமிழகத்தில் கழிப்பறை கட்டியுள்ளனர்.

*1,816 கனமீட்டர் - தனி நபருக்குச் சராசரியாக 2001ல் கிடைத்த நீரின் அளவு. இது 2050ல் 1,219 கனமீட்டராகக் குறையும் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

*2,30,00,000 பேர் இந்தியாவில் தினமும் சராசரியாக ரயில்களில் பயணிக்கிறார்கள். இதில் 20%, அதாவது 46,00,000 பேர் பெண்கள்.

*1 கோடிப் பேர், உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் காசநோயால் பாதிக்கப்பட்டு, 10 லட்சம் பேர் இறக்கின்றனர்.   
*2.20 கோடிக்கும் கூடுதலான பம்புசெட்டுகள் இப்போது இந்தியாவில் நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன.

அன்னம் அரசு