முதல் வாக்காளர்களே... கடமை தவறாதீர்கள்!இப்படிச் சொல்ல காரணமிருக்கிறது.ஜனநாயகத்தின் விழுமியங்களை அடுத்த தலைமுறைகளின் கைகளில் ஒப்படைக்கும் விதமாக அமைவதே புதிய வாக்காளர்களின் வரவு.வாக்கு என்கிற வலிமையான சக்தியை முதன் முறையாக நிறைவேற்றப் போகும் ஆர்வத்தை முதன் முறை வாக்காளர்களிடம் பார்க்க முடியும். நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் சுமார் 13 லட்சம் முதன் முறை வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால், இவர்களில் பலர் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய முன்வரவில்லை. குறிப்பாக, சென்னையில் மட்டும் 48% முதன்முறை வாக்காளர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். இது தவறு. வீட்டின் விரிவாக்கமே நாடு. அதை மனதில் வைத்து மறக்காமல் வாக்களியுங்கள்.  

முதல் முறை வாக்களிப்பவர்களுக்கு மட்டுமல்ல... வாக்களிக்கும் உரிமையுள்ள அனைவருக்குமே இது பொருந்தும்.யார் நம்மை ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். எனவே, மறக்காமல் அனைவரும் ஏப்ரல் 6 அன்று வாக்களியுங்கள்!

அன்னம் அரசு