சொந்த சமூக ஊடகம் தொடங்கும் டிரம்ப்!வேறென்ன செய்ய..? டுவிட் போட்டால் டுவிட்டர் நிர்வாகம் நீக்குகிறது. தொடர்ச்சியாக டுவிட் போட்டால் அக்கவுண்ட்டையே முடக்குகிறது. ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டால் அதையும் அந்த நிர்வாகம் டெலிட் செய்கிறது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப், இப்போது புதிய முடிவுக்கு வந்திருக்கிறார்.யெஸ். விரைவில் மீண்டும் சமூக ஊடகங்களுக்கு திரும்ப இருக்கிறார். ஆனால், இம்முறை தனக்கென சொந்தமாக ஓர் ஊடகத்தை ஏற்படுத்தி, அதில் வர இருக்கிறார்!

அமெரிக்காவில் தேர்தல் நடைபெற்றபோது, டிரம்பின் சர்ச்சை பேச்சுகளை அடுத்து, ‘டுவிட்டர்’ நிறுவனம், அவருடைய கணக்கை நிரந்தரமாக நீக்கியது. தவிர பல சமூக ஊடகங்களும் அவருக்கு தடை விதித்தன.எனவே, வேறு எந்த நிறுவனத்தையும் சார்ந்திருக்காமல், சொந்தமாக, ‘டுவிட்டர், ஃபேஸ்புக்’ போல, ஒரு சமூக ஊடகத்தை துவக்கும் முடிவுக்கு அவர் வந்திருக்கிறாராம். இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் நிறுவனத்தை துவங்கிவிடுவார் என்கிறார்கள்.

காம்ஸ் பாப்பா